நோய் எதிர்ப்பு சக்தி மிக்க "கடக்நாத்' கருங்கோழிகள் : இதயநோயாளிகள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மத்தியபிரதேச மாநிலத்தில், காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' கருங்கோழிகள், சேலம் மாவட்டம் ஓமலூரில் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகளுக்கு, இதய நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், கிலோ, 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடக்நாத் என்னும் கருங்கோழிகள், மத்திய பிரதேசத்தை தாயகமாகக் கொண்டவை. இந்த கோழிகள் அங்குள்ள மலை வாழ் பழங்குடியின மக்களால் பராமரிக்கப்பட்டும், காடுகளில் தானாக வளரும் இயல்பை கொண்டவை.

"பிளாக் மீட் சிக்கன்' : இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இதற்கு பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என, அழைக்கப்படுகிறது. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது. இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர். ஹோமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கடக்நாத் கோழி இறைச்சியை சாப்பிட அறிவுறுத்துகின்றனர். இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது. கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டும் உள்ளது.
இதன் காரணாக, இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்கு தேவையான ஹார்மோன் சத்துக்களும் அதிகம் உள்ளது.

முழுதும் கறுப்பு தான் : இந்த கோழி ரகம் வெளிப் பகுதியில் மட்டுமின்றி உட் பகுதி, அதாவது சதைப்பகுதி அனைத்திலும் கருப்பாகவே காட்சி அளிக்கிறது. உட்பகுதியில், ஒரு சில பகுதிகளில் மட்டும் சதை கருப்பு, வெள்ளை கலந்து காணப்படுகிறது. தற்போது இந்த கோழி ரகங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகரில், பத்துக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோழி உயிருடன் கிலோ, 300 ரூபாய்க்கும், கறியாக, 370 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக் கோழியை போல் அல்லாமல், முற்றிலும் கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும், இக்கோழி ரகங்கள், தமிழகத்தில்ல சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பிரத்தியோக பண்ணை அமைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஓமலூரில் பண்ணை அமைத்த கோழியை வளர்த்து வரும் வினோத்குமார் கூறியதாவது: இக்கோழிக்கு வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லி, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் மவுசு அதிகம். அங்குள்ள மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

உணவுக் கழகத்தினர் சான்று : மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், இந்த ரக கோழிகள் இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது. இந்த கோழிகளை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறேன். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முட்டை ஒன்று, 60 ரூபாய் என்ற விலை கொடுத்து, 100 முட்டைகளை வாங்கினேன். அதை வைத்து, குஞ்சு பொறித்ததில், 50 குஞ்சுகள் மட்டும் கிடைத்தன. தற்போது அதன் மூலம் கோழிகள் நாளுக்கு நாள் பெருக்கம் அடைந்து வருகின்றன. கோழி வளர்ப்பில் எந்த வகையிலான செயற்கை மருந்து, மாத்திரை பயன் படுத்துவது இல்லை. கோழியின் உடல், முட்டைகளில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், பராமரிப்பில் மருத்துவ செலவு இல்லை. செயற்கை கருவூட்டல் கிடையாது. பண்ணையிலேயே ஒவ்வொரு அறையிலும், மூன்று முதல் நான்கு சேவல் கோழிகள் மட்டும், பெட்டை கோழிகளுடன் வளர்க்கிறேன். கருவூட்டம் பெறும் கோழிகள், 15 நாள் முட்டை இடுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிக்கு பின், மீண்டும் முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டைகளை கொண்டு கோழிகளை உருவாக்குகிறேன். ஒரு நாள் ஆன கோழிக் குஞ்சை, 60 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். நான்கு மாதம் ஆன கோழியின் எடை, ஒன்றரை கிலோ என்ற வகையிலும், ஆறு மாதம் வளர்க்கப்படும் கோழியின் எடை, இரண்டு கிலோ என்ற அளவுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு: 99655 68919

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜன-201319:21:26 IST Report Abuse
Pugazh V ஈமு கோழி கலாட்டா முடியும் முன் அடுத்த கலாட்டா,,தமிழர்கள் நெற்றியில் எழுதி ஒட்டி இருக்கிறது, //நான் ஏமாளி// என்று. ஆரம்பிக்கட்டும்..மோசடிகள்..
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
17-ஜன-201314:23:30 IST Report Abuse
ganapathy இது காடுகளில் இயற்கையாக வளரும் போது தான் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும். பண்ணைகளில் வளர்க்க ஆரம்பித்தால் இது தன்னுடைய இயல்பில் இருக்காது. நோயாளிகள், மாமிசம் சாப்பிடுவதை குறையுங்கள். உடற்பயிற்சி செய்வது நல்லது. டாக்டரிடம் சென்று மருந்து மாத்திரைகளையும் ஒழுங்கா சாப்பிடனும்.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
17-ஜன-201314:14:54 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் கூட அசைவத்தின் சத்து உள்ளதற்கு மேலும் ஒரு சான்று.
Rate this:
Share this comment
Cancel
KUFRI - Nellai,இந்தியா
17-ஜன-201312:31:06 IST Report Abuse
KUFRI ஈமு கோழி பிராடு . எப்போ கறுப்பு கோழி பிராடு ?
Rate this:
Share this comment
Cancel
Jana - rajapalayam,இந்தியா
17-ஜன-201310:36:33 IST Report Abuse
Jana இன்னுமொரு முதலீட்டர்கலை கவரும் செய்தி மக்களே ஜாக்கிரதை இன்னும் சில வாரங்களில் கருப்பு கோழி பண்ணை கவர்ச்சியான விளம்பரங்கள் வரும் ஏமாறாதீர்கள்
Rate this:
Share this comment
Rudras Kadaknath - Jolarpettai,இந்தியா
17-ஜன-201322:58:25 IST Report Abuse
Rudras Kadaknathஆமாம் இதில் பெரிய பண்ணை மோசடிகள் வர வாய்ப்பு இருக்கின்றது . நாங்கள் இந்த கோழி இனத்தை கடந்த 2009 முதல் வளர்கின்றோம் . 10 குஞ்சி முதல் பல ஊர்களுக்கு டெலிவரி கொடுத்திருக்கிறோம். மேல் கூறப்பட்ட செய்திகள் முழுவதும் உண்மை இல்லை. கடகநாத் கோழிகள் நோய் தீர்க்கும் சக்தி கொண்டவை என சித்த மருத்துவ குறிப்புகள் உண்டு. வர்ம மருத்துவத்தில் இதன் பயன்களை நீங்கள் வர்ம மருத்துவர்களை கேட்டு பாருங்கள். எனினும் இதில் மோசடி செய்ய வைப்புகள் உண்டு. ருட்ராஸ் ப்ரீடர்ஸ் பொறுத்தவரை கவர்சிகராமன் திட்டம் எதுவும் இல்லை. கருங் கோழிகள் நாடு கோழி வகைதான் 4.5 மதம் அனால் தான் 1 kg வரும். சுவை நன்றாக இருக்கும். கொழுப்பு குறைவாக இருக்கும். முட்டை பொறிக்கும் திறன் 50% -85%. இந்த வகை கோழிகள் அழியும் தருவாயில் உள்ளது. இதனை வளர்த்தல் எளியது. என்னுடைய வேண்டுகோள்: திட்டம் எதிலும் எப்போதும் சேராதீர்கள். 10 கொழியானாலும் நீங்களே வளர்த்து பயன் பெறுங்கள். உண்மையன் நாடு கோழி வகை நம் நாட்டில் 21 வகை உள்ளது. அதில் நீங்கள் எதை வளர்த்தாலும் உரிய தடுப்பு ஊசி போட்டு சரியான பாதுகாப்பு கொடுத்து பராமரித்தால் மிதமான லாபம் நிச்சியம் உண்டு . நன்றி, ருட்ராஸ் ப்ரீடர்ஸ்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்