புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சஞ்சீவி நகரில் நடந்த, இளவட்ட கல் தூக்குதல் போட்டியில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.சஞ்சீவிநகர் இளம்பறவை, யூத் கிளப், 19ம் ஆண்டு மன்ற துவக்க விழா மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. நேற்று முன் தினம் கிரிக்கெட் போட்டி நடந்தது. மேலும் பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.மாரத்தான் ஓட்டம், கபடி, வழுக்குமரம் ஏறுதல், ஸ்லோ சைக்கிள் ரேஸ், ஸ்லோ பைக் ரேஸ், கண்களைக் கட்டி பானை உடைத்தல், மகளிருக்கான 500 மீட்டர் ஓட்டம், ஊசியில் நூல் கோர்த்தல், பன் கடித்தல், கோ-கோ, கயிறு இழுத்தல், கட்டத்தில் கோலம் போடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.கல் தூக்கும் போட்டி இளைஞர்களுக்கான, இள வட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வடமுடன் கலந்து கொண்டு, கல் தூக்கினர். @பாட்டி ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.