புதுடில்லி: நாட்டில் மெகா ஊழல் என நிரூபித்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு தற்போது மேலும் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டு சுப்ரீம் கோர்ட் வரை சென்று கைது படலம் முடிந்து அனைவரும் ஜாமினில் இருந்து வருகின்றனர். சமீபத்தில் கூட சில நிறுவனங்கள் மீது புதிய குற்றச்சாட்டு பதிவானது.
இந்நிலையில் கோர்ட் ஆணையின்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. இது கடந்த 2008யை விட 11 மடங்கு அதிகரித்தது. இதனால் இதில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஸ்பெக்ட்ரம் ஏலம் போகாமல் படுத்து கொண்டது.
இந்நிலையில் சி.டி.எம்.ஏ., சேவையில் பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் நிர்ணய விலையை 50 சதமாக குறைக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில்; கடந்த முறை இதன் நிர்ணய விலை 18 ஆயிரத்து 200 கோடி ( 5 மெகா ஹாட்ஸ் ) விலை இருந்தது. இது 50 சதமாக குறைக்கப்படுகிறது என்றார்.
இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. வரும் சி.டி,எம்.ஏ. , ஜி.எஸ்.எம், சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் முழுவதும் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடையும். இதன்மூலம் அரசு எவ்வளவு வருவாய் பெறும் என்பதை சந்தைகள் முடிவு செய்யும் என்றார். தனியார் நிறுவனங்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையை இழந்துள்ளதால் இது போன்ற வருமான குறைவு ஏற்படுகிறது. என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 50 சதம் விலைக்குறைப்பு ஏலம் எடுப்பவர்கள் பலரை கவரும் என மத்திய அரசு நம்புகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.