புதுடில்லி: "உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நாட்டு மக்களில், 67 சதவீதம் பேருக்கு, நபர் ஒன்றுக்கு, மாதம் தோறும், 5 கிலோ உணவு தானியத்தை மிக குறைவான விலையில் வழங்க வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
நாட்டு மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஆலோசனையை அடுத்து, "உணவு பாதுகாப்பு மசோதா' தயாரானது. இந்த மசோதாவில், மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவோர், இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர்.
அதில், முன்னுரிமை பிரிவினருக்கு, மாதம் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு, 7 கிலோ அரிசி மற்றும் கோதுமையை, 3 மற்றும் 2 ரூபாய் விலையில் வழங்க வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டது. அதே நேரத்தில், பொது பிரிவினருக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையில், 50 சதவீத விலையில், 3 கிலோ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல்:
மத்திய அரசின் இந்த மசோதா, 2011 டிசம்பரில், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின், பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. விலாஸ் முட்டம்வர் தலைமையிலான, உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது வினியோகம் தொடர்பான, பார்லிமென்ட் நிலைக்குழு, மசோதாவை பரிசீலித்து, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம், நேற்று, அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக முட்டம்வர் கூறியதாவது:நாட்டு மக்களில், 67 சதவீதம் பேருக்கு, நபர் ஒன்றுக்கு, மாதம் தோறும், 5 கிலோ உணவு தானியங்களை, மிக குறைவான விலையில் வழங்க வேண்டும். அதாவது, அரிசியை கிலோ, 3 ரூபாய்க்கும், கோதுமையை 2 ரூபாய்க்கும், இதர தானியங்களை, கிலோ, 1 ரூபாய்க்கும் வழங்க வேண்டும்.உணவு தானியங்களை வழங்குவதில், முன்னுரிமை பிரிவு மற்றும் பொதுப் பிரிவு என, எந்த பிரிவினையும் கூடாது. அனைத்து பிரிவினருக்கும், மாதம் ஒன்றுக்கு, 5 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும். கிராமப் புறங்களில் வசிப்பவர்களில், 75 சதவீதம் பேருக்கும், நகரங்களில் வசிப்போரில், 50 சதவீதம் பேருக்கும், மானிய விலையில் உணவு தானியங்களைத் தர வேண்டும்.கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, கூடுதலாக, மாதம் தோறும், 5 கிலோ அரிசி வழங்க வேண்டும். அதையும் குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்து, குழந்தை பிறந்த பின், இரண்டு ஆண்டுகள் வரை வழங்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம்.
மசோதாவில், ஒரு நபருக்கு, மாதம் ஒன்றுக்கு, 7 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும் என, பரிந்துரைத்திருந்தாலும், தற்போதைய உணவு உற்பத்தி மற்றும் கொள்முதல் சூழ்நிலையில், அதற்கான சாத்தியமில்லை.ஒரு மாதத்திற்கு, 4.88 கோடி டன் ஒரு நபருக்கு, மாதம்தோறும், 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கவே, 4.88 கோடி டன் உணவு தானியங்கள் தேவைப்படும். இது தவிர சமூக நல திட்டங்களுக்கு, 80 லட்சம் டன் உணவு தானியம் தேவை. மேலும், வருடம் தோறும் அரசு வழங்கும் உணவு மானியம், 1.12 லட்சம் கோடிக்கு உள்ளாகவே இருக்க வேண்டும். இந்த உணவு பாதுகாப்பு மசோதா, 10 ஆண்டுகளுக்குப் பின், மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதேபோல், உணவு தானியங்களின் விலையையும், 5 ஆண்டுகளுக்குப் பின், மாற்றி அமைக்க வேண்டும். உணவு தானியங்களுக்குப் பதிலாக, அதற்கான மானியத்தை, தற்போது, மக்களுக்கு பணமாக வழங்குவது விரும்பத்தக்கது அல்ல.
இந்த பண பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்தும் முன், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, வங்கி வசதிகள் எளிதில் கிடைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும். மேலும், பொது வினியோக முறையையும், மத்திய அரசு நவீனப்படுத்த வேண்டும்; கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். அதேநேரத்தில், தற்போது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது என, பரிந்துரை செய்துள்ளோம்.இவ்வாறு முட்டம்வர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ரேசன் கடைகளில் கொடுக்கும் அரிசியின் தரத்தை உயர்த்தினாலே வெளி மார்கெட்டில் அரிசியின் விலை குறைந்து விடும். ரேசன் கார்டு வைத்திருப்பவர்களில் 70% மக்கள் ரேசனில் அரிசி வாங்குவதில்லை . ஆனால் அவர்கள் அரிசி வாங்கியதாக ரேசன் கார்டில் குறித்துக் கொள்ள செய்வார்கள். அந்த அரிசிதான், வெளி மாநிலங்களுக்கு கடத்தப் படுகிறது. இது எல்லா அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் தெரியும். வெளி மார்கெட்டில் கிடைக்கும் அரிசியின் தரத்தில் ரேசன் கடைகளிலும் கொடுத்தால் நிச்சயம் அதிகமான மக்கள் ரேசன் அரிசியை வாங்குவார்கள். வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலையும் குறையும்.
விவசாய நிலங்கள் எல்லாம் பிளாட் போட்டு விர்க்கப்பட்டுகொண்டுஇருக்கிரது எங்கே இருந்து விவசாயம் பண்ணுவது மக்களுக்கு தானியம் விநியோகம் பண்ணுவது அரசாங்களுக்கு தொலைநோக்கு பார்வை என்பதே கிடையாது ... ஒரு காலத்தில் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை இப்பொழுது பிளாட் களஞ்சியமாக மாறிக்கொண்டு இருக்கிறது ... நெற்களஞ்சியம் என்பதெல்லாம் வரலாறாக மாறிவிட்டது இந்தியா எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டயத்திற்கு வந்துவிடப்போகிறது
மான்ய விலையில் ஏழை மக்களுக்கு விற்பதும், ஆதார விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து வாங்குவதும் இக்காலகட்டத்தில் அரசுக்கு கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அரசின் கடமையும் கூட. மான்யம் என்பது உதாரணமாக ரூ.100 மதிப்புள்ள பொருளுக்கு ரூ.80 (மானியம்) அரசு கொடுத்து மீதம் ரூ.20 -ல் ஏழை மக்களுக்கு
விற்பனை செய்கிறது. இந்தியப் பெருநாட்டில் அனைவருக்கும் உணவுப் பொருள் கிடைக்க வேண்டும் என்பதே
இதன் அடிப்படை நோக்கம் ஆகும். இது ஏழை, எளியவர்களுக்கு மட்டும் கட்டாயம் போய்ச்சேர வேண்டும்,.
இதில் உண்மை, நேர்மை, நியாயம், கவனம் செலுத்தப்பட வேண்டும். வசதியுள்ளவர்கள் மான்யம் பெறத் தகுதி
பெற்று மான்ய விலையில் பெற்ற பொருட்களை வெளிச்சந்தை விலைக்கு விற்று இலாபம் அடைகின்றனர்.
இது போன்ற மான்ய விரைங்களை அரசு தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் நாடு எதிர் கொண்டுள்ள முக்கிய பிரச்
சனைகளுக்கு தீர்வு காணப் போதுமான நிதி வளம் பெருகும். நாடு நலம் பெறும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.