last hope failed on cavery delta farmers | டெல்டா விவசாயிகளின் பயிறு உற்பத்தி இலக்கு முயற்சி படுதோல்வி | Dinamalar
Advertisement
டெல்டா விவசாயிகளின் பயிறு உற்பத்தி இலக்கு முயற்சி படுதோல்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், அதை ஈடு கட்டும் வகையில், பயிறு வகைகளை உற்பத்தி செய்ய, விவசாயிகள் போட்ட கணக்கும் கை கூடவில்லை.

டெல்டா மாவட்டங்களில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர், ஆய்வை முடித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்படும் என்பது, இதுவரை அறிவிக்கப்படவில்லை.ஒரு பக்கம் போராட்டம் நடத்தினாலும், மறு பக்கம், நம்பிக்கையை கைவிடாத விவசாயிகள் பலர், சம்பா சாகுபடி செய்த நிலங்களை பண்படுத்தி, அதில் உளுந்து, துவரை உள்ளிட்ட பயறு வகைகளை, உற்பத்தி செய்யலாம் என, திட்டமிட்டனர். நெற்பயிர்கள், தண்ணீரை அதிகம் விரும்பும் பயிர்கள் என்பதால், நாற்று நடுவது முதல், அறுவடைக்கு இருவாரங்களுக்கு முன்பு வரை, தண்ணீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்கும். ஆனால், பயறு வகைகளுக்கு, தண்ணீர் தேவை மிகவும் குறைவு.

ஆறுமாத பயிரான இவற்றிற்கு, மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும் என்பதை மனதில் வைத்தே, விவசாயிகள் இந்த முடிவை எடுத்தனர். இதற்காக, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவின் பேரில், காவிரியில் இருந்து கர்நாடகா தண்ணீர் திறக்கும் என விவசாயிகள் பெரிதும் நம்பினர். ஆனால், கர்நாடகாவிற்கு குடிநீர் தேவை இருப்பதாகக் கூறி, காவிரி கண்காணிப்பு குழு கைவிரித்ததால், விவசாயிகள் போட்ட பயறு உற்பத்தி திட்டம் கைகூடவில்லை.

இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர், விருத்தகிரி கூறியதாவது: தண்ணீர் தேவை அதிகமின்றி, பயறுவகைகளை உற்பத்தி செய்யலாம். சொட்டுநீர் பாசன முறையும் பயறுவகைகளின் உற்பத்திக்கு கைகொடுக்கும். 2011- 12ம் ஆண்டு, மாநிலம் முழுதும், 3.30 லட்Œம் டன் பயறுவகைகள் உற்பத்தி செய்யப்பட்டது. அதில் ஒரு லட்சம் டன் பயறு வகைகள், டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியானது.குறுவை, சம்பா சாகுபடி கை கொடுக்காததால், அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய, பயறு உற்பத்தி கைகொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதுவும் நடக்கவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என்பதால், இந்த ஆண்டும், குறுவை சாகுபடி நடக்காது. விவசாயிகள் மேற்கொண்ட கடைசி கட்ட முயற்சியும், தோல்வியடைந்துள்ளது.எனவே, அரசு வழங்கும் இழப்பீட்டை மட்டுமே, விவசாயிகள் நம்பியுள்ளனர். இந்த நிதி தான், விவசாயிகளின் குடும்பங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
18-ஜன-201322:44:39 IST Report Abuse
M.P.MADASAMY விளை நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாகிக்கொண்டிருக்கின்றன.காவிரி நீர்,மிகக்குறைந்த பருவமழை இவை காரணமாக பயறு விவசாயத்துக்கும் வழியில்லாமல் போய்விட்டது.ரியல் எஸ்டேட்காரர்கள் காட்டில் நல்ல மழை. விவசாயிகள் நிவாரணபணத்துக்கு கையேந்தும் அவல நிலை.உச்ச நீதிமன்றம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Kuppusamy - Erode,இந்தியா
18-ஜன-201312:30:47 IST Report Abuse
Kuppusamy வில்லியில்ல விவசாயம் எப்போது வரும் 2016 ல
Rate this:
0 members
0 members
47 members
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
18-ஜன-201310:51:13 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. உண்மை... டெல்ட நெற்பயிர் விவசாயம் ஒன்றுமில்லாமல் போனபோது.. எனக்கு தெரிந்து உறவினர்களும்.. நண்பர்களும் கடந்த நவம்பர் மாதங்களிருந்தே.. நல்ல விதை பயிருக்கு அலைந்தனர்.. குறைந்த அளவே ஈரப்பதம் போதுமான இந்த பயிர்வகைகளுக்கு தேவையான் விதைகளை இந்த அரசுகள் ஏற்பாடு செய்யவில்லை...நெல் படுத்து தோல்வி உற்ற நிலையில், அரசாங்கம் இந்த பயிர் விவசாயதையாவது.. ஊக்குவித்திருக்கவேண்டும்.. ஆனால் எப்போதுபோல்.. எனக்கென்ன.. கர்நாடகாவும்.. கருணாவும் கையை வைத்து காவிரியை தடுத்துவிட்டனர் என்று சொல்லி அரசியல் பண்ணி.. விவசாயிகளின்.. வயிற்றிலடித்துவிட்டனர். ஆனால் இவர்களும் விவசாய்கள் என்று சொல்லி.... கொல்வர்...மக்களை.
Rate this:
3 members
0 members
1 members
Share this comment
Snake Babu - Salem,இந்தியா
18-ஜன-201314:09:38 IST Report Abuse
Snake Babuஉண்மை, கரூர்ல நம்மாழ்வார் பயிர் விவசாயத்தை பற்றி அதிகமாக பேசுகிறார். இதற்காக ஒரு நிறுவனத்தையும் ஏற்படுத்தி சொல்லியும் கொடுக்கிறார். அதையும் நாம் கேட்க வில்லை. அரசாங்கம் கேவலம் ஒருபுறம் இருந்தாலும், நாமளும் கொஞ்சம் சுதாரித்து கொண்டிருக்கலாம்....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
18-ஜன-201310:17:53 IST Report Abuse
Mohandhas ஏன் தமிழன் விவசாயத்தை மட்டுமே நம்பி இறுக்க வேண்டும்?,, தமிஷ்நாடு அதற்கு ஏற்றதாக இப்போது இல்லை...மாற்றாக வேறு தொழில் கொண்டுவரவேண்டும். நெல்லை, நாம் மட்டும் கழ்ட்டபட்டு பயிரிட வேண்டும், பிற மாநிலத்தவர்கள் அதை நோகாமல் சாப்பிடுவார்களாம்.. சீன போன்று விவசாயம் செய்ய முடியாத இடத்தில் சிறு தொழில் கூடங்கல்( எலக்ட்ரானிக் பார்ட் அசெம்ப்ளி, ரப்பர் மோல்ட், போன்று ..) தொடங்கவேண்டும்,.
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
18-ஜன-201320:45:15 IST Report Abuse
Seshadri Krishnanஉஷ்...சத்தமா சொல்லாதீங்க. கம்யுநிஸ்ட் காரனுங்க தொழிற்சங்கம் ஆரம்பித்து உண்டி குலுக்க ஆரம்பிச்சுடுவானுங்க....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
18-ஜன-201309:58:45 IST Report Abuse
kumaresan.m " மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ,பிளாட்டை தடுப்போம், மழை நீரை சேகரிப்போம் "இல்லையெனில் மண்ணோடு மண்ணாக விரைவில் மடிவோம் ???
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
SSK, Trichy - Marmul,ஓமன்
18-ஜன-201309:47:08 IST Report Abuse
SSK, Trichy "தண்ணீர் தேவை அதிகமின்றி, பயறுவகைகளை உற்பத்தி செய்யலாம். சொட்டுநீர் பாசன முறையும் பயறுவகைகளின் உற்பத்திக்கு கைகொடுக்கும்." We need to find out enhance development of irrigation to save water and crops.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
18-ஜன-201308:56:58 IST Report Abuse
P. Kannan நமக்கு அறிவும் உண்டு ஆற்றலும் உண்டு மாற்று வழியை யோசிக்க கற்றுக்கொள்ளுங்கள் மக்களே.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஜன-201308:23:28 IST Report Abuse
Pannadai Pandian டெல்டா விவசாயிகள் மார்கழி மாச கடைசியில் நெற்பயிர் முற்றிய நிலையில் கடைசி தண்ணீர் விட்டு அது வற்றிய நிலையில் உளுந்து பயிறு போன்ற ஊடு பயிர்களை விதைப்பார்கள். இவற்றுக்கு 2.5 முதல் 3 மாதங்கள் போதும். தண்ணீரும் தேவை இல்லை. மாசி மாச கடைசி, பங்குனியில் இவற்றை அறுவடை செய்வார்கள். இது போலவே நரிப்பயிறு என்று ஒன்று இருக்கிறது. அது சைசில் சிறிதாக இருக்கும். இதனையும் விவசாயிகள் வயல் உரத்துக்காக பயிரிடுவார்கள். வளர்ந்து முற்றிய நிலையில் தண்ணீரை பாய்ச்சி ஒரு வாரம் வைத்திருப்பார்கள். பயிர் முழவதும் அழுகிய நிலையில் வயலை உழுது நாற்று நடுவார்கள். இது ஒரு சுத்தமான இயற்க்கை உரம். சமயம் கிடைத்தால் கிராமத்தில் செட்டில் ஆகி விவசாயி ஆகிவிடலாம் என்றிருக்கிறேன். ஆனால் ஒரு மாறுபட்ட, இயற்கையை சார்ந்த, விஞ்ஞான விவசாயி. கூலி கிளாஸ் போட்டுக்கிட்டு டிராக்டர் ஓட்டனும், கார்கோ ஷார்ட்ஸ் மாட்டிகிட்டு, கையில க்ளவுஸ் போட்டுக்கிட்டு, தலையில மூங்கிலால் பின்னப்பட்ட பனாமா தொப்பி மாட்டிகிட்டு வயல் வேலை பாக்கணும். எப்படி நம்ம ஐடியா ??? சாயந்தரம் ஆனா ஓபன் ஜீப்புல நம்ம செல்ல பிராணிகளோட வளம் வரணும். வீட்டில இன்டர்நெட் முதல் எல்லா வசதியும் இருக்க வேண்டும்.
Rate this:
2 members
0 members
15 members
Share this comment
poiyyan - doha,கத்தார்
18-ஜன-201321:47:43 IST Report Abuse
poiyyanஅண்ணா நம்ம ஊருக்கு வாங்க,ஆனா அங்கிருந்து எதையாவது இறக்குமதி பண்ணிடாதீங்க.மயிலாடுதுறை பக்கம் தான் நம்ம ஊரு.பெரிய பண்ணை வீடா பாக்கட்டுமா...
Rate this:
0 members
0 members
60 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
18-ஜன-201301:32:13 IST Report Abuse
Thangairaja என்ன கொடுமை பாருங்க....ஏற்கனவே விலை நிலங்களெல்லாம் ரியல் எஸ்டேட் பிசினசுக்கு பலியாகி கொண்டிருக்கும் போது, இம்மாதிரியான விவசாய தோல்வியால் நம் மாநிலத்தில் விவசாயம் எப்படி தலைக்கும். எந்த நம்பிக்கையில் இனி விவசாயம் செய்வார்கள். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக கோர்ட்டு படி ஏறுவதை மட்டுமே கொள்கையாக கொண்டு செயல் படும் ஆட்சியாளர்களால் வழங்கப்படும் இழப்பீட்டினால் மட்டும் இழந்த நஷ்டத்தையும் உணவுக்கான ஆதாரத்தையும் தேட முடியுமா.....அனுசரிச்சு போக தெரியாதவங்க எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும், உடன் இருக்கறவங்களுக்கு இழப்பு தான். ஆட்சியே அந்த மாதிரியானவங்க கையிலிருந்தால் குரங்கு கை பூமாலை ........
Rate this:
7 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்