Will eradicate the dmk 's action : Jayalalithaa | தமிழின தீய சக்திகளை வேருடன் ஒழிப்போம்' : ஜெயலலிதா சூளுரை - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழின தீய சக்திகளை வேருடன் ஒழிப்போம்' : ஜெ., சூளுரை

Updated : ஜன 18, 2013 | Added : ஜன 17, 2013 | கருத்துகள் (131)
Advertisement
 தமிழின  தீய  சக்திகளை வேருடன் ஒழிப்போம்' :  ஜெ., சூளுரை

கோத்தகிரி: தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும், தமிழின துரோக, தீய சதி கும்பலை, வேருடன் சாய்ப்போம்,'' என, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் அமைக்கப்பட்ட, எம்.ஜி.ஆர்., வெண்கல சிலையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை, 11:23 மணிக்கு திறந்து வைத்தார்.

கட்சி கொடியை ஏற்றி வைத்து, விழா மலரை வெளியிட்டு, அவர் பேசியதாவது:ஏழை, எளியோரின் இதயங்களில் என்றென்றும் நிறைந்துள்ளவர், எம்.ஜி.ஆர்., ஆறாவது முறையாக, அ.தி.மு.க., அரியணையில் அமர்ந்துள்ளது; தமிழகமே முதன்மை மாநிலம் என்னும் இலக்கை நோக்கி, பீடுநடை போடுகிறது.காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில், நீதியின் துணையோடு, தமிழக உரிமையை மீட்டெடுக்க, அரசு கடமையாற்றுகிறது. "காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடும் முடிவை, இந்த மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது மாநில அரசின் முனைப்புக்கு கிடைத்த வெற்றி.எம்.ஜி.ஆர்., ஆசியோடு, 1991 மற்றும் 2011ல், எதிர்க்கட்சி என்னும் தகுதியை எட்டுவதற்கும் இயலாத நிலைக்கு, தி.மு.க.,வை வீழ்த்தினோம்.

எம்.ஜி.ஆர்., எதிர்கொண்டு சாய்த்தது, கருணாநிதியை; இன்று நாம் வீழ்த்தியிருப்பதோ, கருணாநிதியின் பரந்து விரிந்த ஊழல் குடும்பத்தை. மத்திய ஆட்சியில் பங்கேற்பு என்னும், அவர்களது ஆணவத்தை, வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் அடியோடு ஒழிப்போம்."காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்னை, கூடுதல் நிதி, அரிசி ஒதுக்கீடு, கெரசின் ஒதுக்கீடு, மின்சார ஒதுக்கீடு' போன்ற தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு, முட்டுக்கட்டைகளை போடும், தமிழின துரோக தீய தி கும்பலை, வேருடன் சாய்ப்போம்.எம்.ஜி.ஆர்., காண விழைந்த, லட்சிய கனவை நனவாக்க சூளுரைப்போம். "நாளைய பாரதம் நம் கையில்' என்ற இலக்கை அடைய, சுழன்று பணி செய்வோம்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambedkumar - Chennai,இந்தியா
18-ஜன-201320:44:14 IST Report Abuse
Ambedkumar தமிழ்நாட்டில் விவசாயம் நசிந்து விட்டது தொழில் துறை சுத்தமாக படுத்து விட்டது. மணல் சுரண்டல் மற்றும் நீர் மாசுபடுவதால் ஆறுகள் அழிந்து வருகின்றன. குடி தண்ணீருக்கே பெரும் பஞ்சம் வரக்கூடிய சூழ்நிலை இன்னும் கொஞ்ச நாளில் தம்ழ்நாட்டு குடி மகன்களின் உடல் நலத்தில் சீகேடு ஏற்பட்டு, அதனால் பல்வேறு வகையான விரும்பத்தகாத மாற்றங்கள் வர உள்ளன. சீரற்ற ஆட்சியினாலும், எதுகை-மோனை பேச்சுக்களாலும் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. திராவிட கட்சிகளினால், நமது பொருளாதாரமே முற்றிலும் அழிந்து விட்டது வருங்கால் சந்ததியினரை காப்பதற்கு ஒரு மாற்று ஏற்பாடு மிக மிக அவசியம்
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
18-ஜன-201320:10:50 IST Report Abuse
KMP நீங்களும் ஒரு தீய சக்தி தான் என்பதை சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன், எப்படி தெரியுமா ??? 1. 2011இல் வெற்றி பெற்று என்னால் தான் கூட்டணி வெற்றி என்றது. 2. அடிக்கடி அமைச்சர்களை மாற்றி மாற்றி மக்களை முட்டாளாக்குவது 3. படித்த IAS IPS அதிகாரிகளை தன் கட்சி அரசியல் மற்றும் பல சுய நலன்களுக்காக அடிக்கடி இட மாற்றம் செய்து. 4. கூட்டாச்சி என்பதை மறந்து விட்டு எப்போதும் மத்திய அரசோடு, வேறு நாட்டு அரசோடு இருப்பது போல அடிக்கடி நடந்து கொள்வது. 5. என் அரசு , எனது அரசு என்று அடிக்கடி சொல்லி, நீங்கள் மக்களால் தான் ஆட்சியில் உள்ளீர்கள் என்பதை மறந்து செயல்படுவது..... இதுவும் ஒரு தீய சக்தியின் செயல் தானே ????
Rate this:
Share this comment
Cancel
Gopi - Kulithalai,இந்தியா
18-ஜன-201318:44:25 IST Report Abuse
Gopi அவருடைய அனுபவம் இவருடைய வயது. பின் ஏன் இந்த ஆட்டம் போடுகிறார். இதன் விளைவு அடுத்த தேர்தலில் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்
18-ஜன-201318:32:29 IST Report Abuse
MentalTamilan 11:23 மணி? 7-ம் நம்பர் ராசி ???
Rate this:
Share this comment
Cancel
saravanakumar - coimbatore,இந்தியா
18-ஜன-201318:23:17 IST Report Abuse
saravanakumar அரசியல்வாதிகள் தேர்தல் பற்றிய பேசாம நாட்டு மக்களை கொஞ்சம் கவனிங்க. காவிரி தண்ணிரும் கரண்டும் கொண்டுவந்து தமிழ் நாடு முதல்வராக, நடந்து கொள்ளுங்கள். அப்புறம் பார்லிமென்ட் தேர்தல் பற்றி நினைக்கலாம் . ............................
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-201318:03:26 IST Report Abuse
Ramesh Rayen ஒரு தீய சக்தி இன்னொரு தீய சக்தியை அழிக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
18-ஜன-201317:54:32 IST Report Abuse
ANBE VAA J.P. புரட்சி தலைவர்,இந்த சூளுரையை அவரின் ஆட்சி காலத்திலயே ஏற்று இருந்தால் , வளர்ப்பு மகனுக்கு 1000 கோடிக்கு மேல் செலவு செய்து திருமணம் செய்தவர்கள் ,மன்னார் குடியை சேர்ந்தவர்கள்,வள்ளுவர் சிலையை புதுப்பிக்க கால தாமதம் செய்தவர்கள் ,அண்ணாவின் பெயரின் ஆசியாவின் பெரிய நூலகம் அமைவதை தடுத்தவர்கள் ,செம்மொழி பூங்காவை அழித்தவர்கள் ,போரில் அப்பாவி மக்கள் அழிவது சகஜம் என்று அறிக்கை கொடுத்தவர்கள் ,தேர்தல் வாக்குறுதியை மறந்தவர்கள் ,மறுத்தவர்கள் , எல்லாம் தொலைந்து போயிருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-201317:34:48 IST Report Abuse
SK2011 நம்ப முதல்வர் ஒரு பெரிய பொக்கிஷம். ஜெயலலிதாவை போல ஒரு புத்திசாலியான முதல்வர் எவரும் இல்லை. அவருடைய தைரியம் எவருக்கும் வராது. அவருடைய சிந்திக்கும் ஆற்றல் மிகவும் பாராட்டுக்குரியது. தமிழகத்தின் மக்களை காப்பாற்ற பின்பு நீண்ட நாட்கள் தீய சக்திகளிடமிருந்து மீட்டெடுக்க ஜெயலலிதாவின் சேவை இந்த நூற்றாண்டில் மிகவும் தேவை.
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-201317:22:39 IST Report Abuse
SK2011 Karunanidhi can never utter a word about the living soul MGR. Even after more than two decades still MGR is seen in front of millions of people in Tamil Nadu and all over the country. Because he demonstrated his genuine humility to all the sections of people while in power and his kindness and love is no comparison with Karunanidhi. MGR ensured that he touched the hearts of those poor and comforted them with his smile and charisma.He practically lived for the poor and fed who ever visited his house to see him. He was rightly awarded with "BHARAT RATHNA" the biggest honor for a politician. And we should be very proud of Ms. Jayalalithaa who carries forward the MGR legacy and our state is in the safe hands. Ms. Jayalalithaa is such a dynamic leader under the current circumstances facing the country and very rightly she was made CM. One should not forget that it was the people who pulled from the clutches of those evil forces( the so called family rulers) and restored her back in power and into the safe and secured hands. On this special day of MGR "s birth anniversary I salute this man MGR who lived and served the people and still ruling in the hearts of people.
Rate this:
Share this comment
Cancel
Nadarajan Ponnusamy - trichy,இந்தியா
18-ஜன-201316:23:41 IST Report Abuse
Nadarajan Ponnusamy திருவாரூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருக்கும் கருணாநிதியை ஒட்டுமொத்த தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா இப்படி போட்டுத் தாக்குவது, கருணாநிதி முதல்வராகவும் ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராகவும் இருப்பதைப்போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. தமிழகத்தில் நிலவும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுஞ்செயல்கள் நடவாமல் தடுப்பதற்கான யுக்திகளை கையாள்வதை விட்டுவிட்டு, மக்களின் அன்றாட தேவைகளான மின்சாரம், தண்ணீர், பேருந்து போக்குவரத்து, மற்றும் விவசாயம் அடியோடு சீர்குலைந்து கிடப்பதை பற்றி கவலைப்படாமல்... விலைவாசி ஏற்றத்தை கண்டுகொள்ளாமல்... கொடநாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு... எந்நேரமும் கருணாநிதியை வசைபாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது... கருணாநிதி ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் யாவும் நினைவுக்கு வந்து நிற்கிறது... "நேற்று" டெல்லியில்... "இன்று" நெல்லையில்... "நாளை" சென்னையில்... என்று அன்றாடம் தமிழகத்திற்காக உழைத்த கருணாநிதியை மீண்டும்... மீண்டும்... "தீய சக்தி" என்று கூறுவது அவர் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது... பாரதீய ஜனதாதான் "தீயசக்தி" என்று எடியூரப்பா கண்டுபிடித்து சொன்னதை நினைவிற்கொண்டு, கருணாநிதியை இன்னமும் "தீய சக்தி" என்று கூறுவதை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Marian - Coimbatore,இந்தியா
18-ஜன-201318:47:28 IST Report Abuse
Marianதமிழகத்திற்காக உழைத்த கருணாநிதியா ...........? அதுவும் டெல்லியில்....... சரியாகத்தான் சொன்னீர்கள். குறிப்பாக இந்த துறைதான் வேணும் என்று டெல்லிக்கு சென்று அடம் பிடித்து வாங்கியதை சொல்கிறீர்களா? டெல்லிக்கு சென்று என்றால் வீல் சேரில் போய் அடம் பிடித்தது. மறக்க முடியுமா இந்த மாமனிதரை (?) பற்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை