சென்னை: நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தாத, எந்த ஆட்சியும் நீடிக்காது; அது போன்ற ஆட்சி நீடிப்பதை, மக்கள் விரும்புவதில்லை,'' என, சென்னை வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசினார்.
சென்னையில் நடைபெற்ற, பிரபல தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனி விமானத்தில், ஆமதாபாத்தில் இருந்து சென்னை வந்தார். அவரை, தமிழக, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர், வரவேற்றனர்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடையில் ஏறி, அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்த மோடி, பேசியதாவது:என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி. நம் நாட்டு மக்களுக்கு, வளர்ச்சிப் பசி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சியை ஏற்படுத்தாத எந்த ஆட்சியும், இனி நீடிக்க முடியாது. வளர்ச்சியை ஏற்படுத்தாக ஆட்சியை, மக்கள் விரும்புவதில்லை. பா.ஜ., கட்சியால் மட்டுமே, மக்களுக்கு நன்மைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்பதை, நான் பெருமையுடன் கூறுவேன்.குஜராத் மக்களின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு பாதை அமைத்து கொடுத்ததால் தான், அங்கு மீண்டும், அமோக வெற்றி பெற்று, முதல்வராக என்னால், பதவியேற்க முடிந்தது.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டை பின் நோக்கி அழைத்துச் செல்கிறது. மக்கள் வளர்ச்சிக்கு, இந்த அரசு, எந்த திட்டத்தையும் உருப்படியாக செயல்படுத்தவில்லை. இந்த ஆட்சியால், மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விவேகானந்தரின், 150வது ஆண்டு விழாவை, நாம் கொண்டாடி வருகிறோம். இந்த தருணத்தில், நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல ஆட்சி ஏற்பட பாடுபடுவோம் என்ற உறுதிமொழியை, அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக மக்கள் மீது, தீராத பற்று கொண்டிருந்த, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான இன்று, சென்னை வந்துள்ளேன். அவருக்கு நான் மரியாதையை செலுத்துகிறேன்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக மக்களின் சார்பாக வரவேற்கிறோம் , தாங்கள் தான் இந்தியாவை வளர்சிபாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். இஸ்ரோ எக்ஸ் சேர்மன் கஸ்துரி ரங்கன் அவர்கள் நாட்டில் பஞ்சம் கூட ஏற்படலாம் என்று கருத்து கூறி இருக்கிறார் . அவற்றை நினைக்கும் பொழுது மனதில் சலனம் ஏற்படுகிறது. இந்தியாவை பொருளாதரத்தில் முன்னேறிய நாடக விளங்க தாங்கள் தான் மாநில அரசுகளுக்கு கட்சி பாகுபாடின்றி ஆலோசனைகளை வழங்க வேண்டும். நல்லது யார் சொன்னாலும் கேட்க கூடிய பக்குவம் அரசியல் கட்சிகளுக்கு வரும். வளர்க பாரதம்.
Mr. Modi, you have good chance to become the next PM of India, we are waiting for your gov in central....All youths in India know about you and your administration... The last ten years your state gov has grown considerably by your powerful and meaningful actions ...the problem is that some local political people they will show you as religious figure while election times... but i am sure that true one day get its position at right time and right place,,,, All the best .....
"வளர்ச்சியை ஏற்படுத்தாத ஆட்சியை மக்கள் விரும்புவதில்லை " அப்படிலாம் ஒண்ணுமில்லை, ஒரு கட்சி நிறைய சம்பாதிசிடுச்சினா, அடுத்த கட்சியை தேர்ந்தேடுதுடுவோம். எங்களுக்கு அது தான் தெரியும். வந்த கட்சி மறுபடியும் நல்லா சம்பாதிக்கும். நாங்க உடனே பழைய கட்சியை கொண்டாந்து விட்டுடுவோம். மற்றபடி வளர்ச்சியை ஏற்படுத்தாத கட்சினுலாம் பார்க்குறது இல்ல.......அமா வளர்ச்சீனா? போன தடவை பொங்கலுக்கு துட்டு கொடுக்கல, இந்த தடவ குடுத்தாங்கள அதுவா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.