Karunanidhi slams Jayalalithaa | முதல்வராக ஜெயலலிதா தான் கெஞ்சினார்: கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வராக ஜெயலலிதா தான் கெஞ்சினார்: கருணாநிதி

Updated : ஜன 18, 2013 | Added : ஜன 17, 2013 | கருத்துகள் (189)
Advertisement
 முதல்வராக ஜெயலலிதா தான் கெஞ்சினார்: கருணாநிதி

சென்னை: எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டு செயல்படாமல் உள்ளார். எனவே, என்னை முதல்வராக்குவதற்கு உதவ வேண்டும் என, அப்போதைய பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதினார்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க.,வின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த, பொங்கல் விழாவில், அவர் நேற்று பேசியதாவது:நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்து, என்னை மிகக் கேவலமாக, முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். முதல்வர் பதவிக்காக, எம்.ஜி.ஆரிடம்., நான் கெஞ்சியதாகவும், அவர் பிச்சை போட்டார் எனவும், ஜெயலலிதா கூறியுள்ளார்.எம்.ஜி.ஆரின்., சிலையை திறந்து வைத்து, அவரது அருமை, பெருமைகளை பேசாமல், என்மீது வசை பாடியுள்ளார். முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தபோது, ராஜிவ்காந்திக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியது, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அக்கடிதத்தில், எனது செல்வாக்கைக் கண்டு, எம்.ஜி.ஆர்., பொறமை படுகிறார். இதனால், எனக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார். நோய்வாய்ப்பட்டு, செயல்பாடாமல் எம்.ஜி.ஆர்., உள்ளார். எனவே, என்னை முதல்வராக்க உதவுங்கள் என, ராஜிவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்நிலையில், நான் முதல்வர் பதவிக்கு கெஞ்சினேன் என, அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார். நாட்டில் நிலவும் மின்வெட்டு, அடிப்படை வசதிகள் பற்றாக்குறையை போக்க, நடவடிக்கை எடுக்காமல், என்மீது குற்றச்சாட்டுகளை, முதல்வர் வீசுவது தேவையற்றது. மக்கள் நலனை காப்பதற்கு, அவர் முக்கியத்துவம் கொடுத்தால் நல்லதாக இருக்கும்.

வள்ளுவர் சிலை சிதிலமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க வைத்ததால், என்மீது ஆத்திரப்படுகிறார். தேவையற்ற ஆத்திரத்தை கைவிட்டு, நாட்டு நலனில் முதல்வர் ஜெயலலிதா அக்கறை செலுத்துவதே சிறந்தது.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலர் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கமம் என்ற பெயரில் கனிமொழி நடத்தி வந்த நிகழ்ச்சிகள், சில ஆண்டுகளாக நின்று விட்டன. தற்போது, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை என்ற பெயரில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை அவர் துவங்கியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (189)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chiruththai - riyadh,சவுதி அரேபியா
21-ஜன-201302:54:24 IST Report Abuse
chiruththai முருகவேல் சண்முகம் அருமையாக சொல்லியிருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Jams - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜன-201312:42:23 IST Report Abuse
Jams ஒரே ஒரு கருத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். எல்லா விசயங்களிலும் இருவருமே சமம்தான். இருவரும் ஒரு விசயத்தில் நல்லது செய்கிறார்கள் என்றால் அது பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தில் கை வைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு நல்லது செய்வதுதான். இன்னும் சொல்லப்போனால் கருணா வேட்டிகட்டிய ஜெயா. ஜெயா சேலை கட்டிய கருணா அவ்வளவுதான். எந்த வேறுபாடும் இல்லை. இருவருக்குமே அவர்களைப்போல் தொண்டர்கள் உண்டு. இரு கட்சிக்குமே சம பலத்தில் வோட்டு வங்கி உண்டு. வேண்டுமானால் அதிமுகவுக்கு 2% கூடுதலாக இருக்கலாம். யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிப்பது கூட்டணிதான். முன்பு காங்கிரஸ் இருந்தது, இப்போ தேமுதிக இருக்கிறது. இதை சரியாக புரிந்து கொண்டு ஜெயா சாரி சோ சென்ற தேர்தலில் தேமுதிக கூட்டணிக்கு பாடு பட்டு வெற்றி கண்டார். 2014ல் திமுகவுக்கு advantage. தேமுதிக தனித்து நின்றாலோ அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்தாலோ அது திமுகவுக்குத்தான் சாதகம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஜன-201300:07:32 IST Report Abuse
Nallavan Nallavan கனி கேஸ்பரின் சங்கமத்தால் (நான் நிகழ்ச்சியைச் சொன்னேன்) என்ன பயன் விளைந்தது???? அந்தக் கூத்து தொடராததே நல்லது....
Rate this:
Share this comment
Cancel
Marabuth Tamilan - Chennai,இந்தியா
19-ஜன-201300:06:08 IST Report Abuse
Marabuth Tamilan அ.தி.மு.க. தான் தமிழ் மக்களை கல்வி கற்காமல் செய்துள்ளது . அதற்க்கு உதாரணம் ...............இன்னும் ...........சினிமாவை நம்பி இருப்பது ..................
Rate this:
Share this comment
Cancel
Marabuth Tamilan - Chennai,இந்தியா
19-ஜன-201300:03:24 IST Report Abuse
Marabuth Tamilan முதலில் M .G .R . என்ன செய்தார்? ஏன்..........அன்று ஜெ வை கட்சியை விட்டு விலக்கி வைத்தார்? என்று சொல்ல முடியுமா....................
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
18-ஜன-201322:33:22 IST Report Abuse
g.k.natarajan தமிழக முதல்வரை தமிழக ஆளும் கட்சி M.L.A.s தான் தேர்ந்தெடுப்பார்கள் கட்சி தலைமைக்கும் பங்கு உண்டு இதில் காங்கிரஸ் எங்கிருந்து வந்தது என்னமோ ஆய் விட்டது தலைவருக்கு
Rate this:
Share this comment
Cancel
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
18-ஜன-201321:43:09 IST Report Abuse
vaaimai கலைஞர் தான் இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் வாதிகளுக்கும் குருநாதர்.
Rate this:
Share this comment
Cancel
krishnamurthy venkatesan - Chennai,இந்தியா
18-ஜன-201321:33:49 IST Report Abuse
krishnamurthy venkatesan திரு கருணாநிதியின் உண்மையான பக்கத்தை தெரிந்து வைத்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன் ஒருவர்தான். கஷ்டபடுவது ஒருவர் அதன் பலனை அனுபவித்தவர் கலைஞர் என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Babu Krishnan - atlanta,யூ.எஸ்.ஏ
18-ஜன-201319:29:27 IST Report Abuse
Babu Krishnan 5 years ago in Kovai he was the one begging to the people , i wont live long this is the last chance for me to serve and swindle for my family please vote me to CM post. This beggar is closing to 100 and still he wants to be cm. Can't even stand on his own. 7uck him and his family all together , if atleast we have some proud and back bone.
Rate this:
Share this comment
Cancel
Warran Blessing - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-201319:19:55 IST Report Abuse
Warran Blessing பதவி ஆசை இல்லாத மனிதன் உண்டா .அது எப்பேர் பட்ட குறுக்கு வழியையும் உருவாக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை