புதுடில்லி: எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், இந்திய வீரர்கள் தலை வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் பேசுவதற்கு, இந்தியா வேகம் காட்டாது; நிலைமை ஆராய்ந்த பிறகு, படிப்படியாக மேற்கொள்ளப்படும்,'' என, இந்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான, எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், இம்மாதம், 8ம் தேதி, இந்திய வீரர்கள் இருவர், பாகிஸ்தான் ராணுவத்தால், தலை துண்டித்து கொல்லப்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில், விரிசல் ஏற்பட்டது; எல்லைகளில் பதற்றம் நிலவியது. "பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்ற குரல் எழுந்த நிலையில், இரு நாட்டு ராணுவ நடவடிக்கை இயக்குனர்கள், நேற்று முன்தினம் சந்தித்து, "பதற்றத்தை தணிக்க நடவடிக்கைகள் எடுப்பது' என, முடிவு செய்தனர்.இந்நிலையில், டில்லியில் நேற்று, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், எல்லை நிலவரம் குறித்து, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், ராணுவ அமைச்சர் அந்தோணியும் விளக்கினர்.
அப்போது, "இந்திய வீரர்கள் படுகொலை விவகாரத்தை, ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என, முன்னர் தெரிவித்த பாகிஸ்தான், இப்போது இறங்கி வந்துள்ளது. வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், வீரர்கள் படுகொலை விவகாரத்தை பேசி தீர்வு காணலாம் என, தெரிவித்துள்ளது' என, கூறினர்.
எனினும், "இருதரப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு இப்போதைக்கு அவசரம் காட்டப்படாது; நிலைமையை கண்காணித்த பிறகு, படிப்படியாக மேற்கொள்ளப்படும்' என, அமைச்சர் சல்மான் குர்ஷித் பின்னர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த சம்பவம் நடந்த piraghu நம் தாய் நாட்டில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தானில் இன்னும் ஒருவர் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை, மாறாக நாம் கண்டனம் தெரிவித்ததற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நமக்கு கண்டனம் தெரிவிக்கிறார். இருபினும் இன்னும் நாம் அவர்கள் இறங்கி வந்து விட்டார்கள் என்று சந்தோசபடுகிறோம்... நம்முடைய இரண்டு வீரர்களை கொன்றதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டாமா? வருந்த வேண்டாமா ?...
கறிவேப்பிலை போல் தலையை கொய்தவர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தை,,,,, குட்ட குட்ட குனிந்தால் வானம் தலையில் தட்டும்,,,,,உண்மையிலே அவனுங்களுக்கு திமிர் இருந்தால், தைரியம் இருந்தால், இவ்வளவு செய்தும், வாய் ஜாலம் காட்டும் எங்கள் அரசியல்வாதிகளிடம் காட்டுங்கடா உங்க திமிர, காக்கா கூட்டம் போடுற மாதிரி கூடும் போது உங்களுக்கு தெரியும் எங்க அரசியல்வாதிகளின் பலம்.....
ஹினா ரப்பானி கர்ரோட பேசறதுக்கு( வழியறதுக்கு...) கிருஷ்ணா தான் சரியான ஆளு........ பாவம் அவரை கழட்டி விட்டதால கோவிச்சுக்கிட்டு சீனாவுக்கு போறாராம். சல்மான்லாம் சரிப்பட்டு வருவாரான்னு தெரியலை......கொஞ்ச நாளு போகட்டும். முஷாரப்போட காய் நகர்த்தல்ல காத்ரி அங்க கலக்கிட்டிருக்காரு. ஒரேயடியா அடுத்த ஆட்சி தலைவரோடேயே பேசிக்கலாம். அதுவரை வாலாட்ட விடாம பார்த்துக்கங்க.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.