a teacher who cleaned the school tiolet | பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்

Updated : ஜன 18, 2013 | Added : ஜன 17, 2013 | கருத்துகள் (73)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பள்ளி கழிப்பறையை சுத்தம்  செய்யும் தலைமை ஆசிரியர்

மதுரை,: "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.

காலை, 9:30 மணிக்கு தான், பள்ளி துவங்கும் என்றாலும், காலை, 8:00 மணிக்கே வந்து விடுகிறார்.வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள் விட்டுச் சென்ற, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்பணிக்காக, துப்புரவு ஊழியர் வரட்டும் என, காத்திருப்பது கிடையாது.மாலை, 4:00 மணிக்கு, பள்ளி முடிந்ததும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார்.

இது பற்றி அவரிடம், சக ஆசிரியர்கள் வியப்புடன் கேட்கும்போது, "நாம் பெற்றப் பிள்ளைகளுக்கு சுத்தம் செய்கிறோம். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், நம் பிள்ளைகள் தான். குழந்தையும், தெய்வமும் ஒன்றல்லவா!' எனக் கூறி ஆசுவாசப்படுத்துவார். எண்ணற்ற ஏழை குழந்தைகளை, சொந்த செலவில் படிக்க வைக்கிறார்.

இதற்காக, மாதம் ஒரு தொகையை, குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்குகிறார். "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும், தலைமை, ஆசிரியர் கில்பர்ட்டின் பணி சிறக்க வாழ்த்துவோம்!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramadass T - New Delhi,இந்தியா
13-பிப்-201311:29:44 IST Report Abuse
Ramadass T God has made number of Rascals. Just equate them, He has made one Gilbert to balance I give a great salute to this gentleman.
Rate this:
Share this comment
Cancel
KPR @ K.P.Ramesh - Kovilpatti, Thoothukudi (District),இந்தியா
07-பிப்-201310:09:13 IST Report Abuse
KPR @ K.P.Ramesh அய்யா, உங்களைப் போன்றோர் நம் நாட்டில் இருப்பதனால்தான், நாடு நலம் பெறும் எனும் நம்பிக்கை அகலாமல் உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
21-ஜன-201311:46:36 IST Report Abuse
CHANDRA GUPTHAN இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், நம் பிள்ளைகள் தான். குழந்தையும், தெய்வமும் ஒன்றல்லவா' இது ஒன்றே அவரை தெய்வ நிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு ஆபிசில் உயர் அதிகாரி செய்தால் பதறி நான் , நீ என்று போட்டி போட்டு செய்கிறோம் . மற்ற ஆசிரியர்களுக்கு ஏன் இந்த உணர்வு வரவில்லை . துப்புரவு ஊழியர் தான் முதலில் வேலைக்கு வரவேண்டும் . அவரே 9.30 மணிக்கு வந்தால் என்ன அர்த்தம் . அரசாங்க உத்தியோகம் , ஏதாவது கேட்டால் ஜாதி வெச்சி பிரச்சினை . அதனால் யாரையும் எதையும் சொல்ல முடியாது என்கிற சூழலில் நம் கையே நமக்கு உதவி என்று செய்கிறார். என் தாய் எங்களுக்கு சொன்னது முடிந்த வரையில் உன் வேலையை நீயே செய் . உதடு தேய்வதை விட உள்ளங்கால்கள் தேயலாம் என்பார் . முதலில் கீழ் படிய கற்றுக்கொள் கட்டளை இட தானே பதவி வரும் - விவேகானந்தர் . தலைவன் என்றால் முதலில் தன்னை தூய்மையானவனா வைத்திருக்க வேண்டும் . தன் பின் வருபவனுக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டும் . (நம் மஞ்சள் துண்டார் கொள்ளையடித்தார் அவரை பின் பற்றியவர்களும் அதையே செய்கிறார்கள் - சட்டம் போட்ட ஆட்சியாளர்கள் சட்டத்தை மதிப்பதில்லை நாமும் அப்படியே ) நம் பிள்ளைகளுக்கு நாம் தான் ரோல் மாடல் . நல்ல சமுதாயம் வளர இவரை போன்றவர்கள் தான் முக்கியம் . திருந்து , திருந்தவிடு . சிரம் தாழ்த்தி கரம் குவிக்கிறேன் ஐயா.நீங்கள் ஒரு நல்ல சமுதாயத்தையே உருவாக்குகிறீர்கள். நல்ல ஆன்மா. வாழ்க வளமுடன். - சந்திரகுப்தன் தோஹா , கத்தார்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
21-ஜன-201309:34:37 IST Report Abuse
Tamilan சார் ...... உங்கள் சேவையை நான் பாராட்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
mahendran - komarapalayam  ( Posted via: Dinamalar Android App )
20-ஜன-201311:48:02 IST Report Abuse
mahendran hats offf sir....
Rate this:
Share this comment
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
20-ஜன-201305:59:37 IST Report Abuse
Siva Panchalingam நல்ல ஒரு பணி செய்பவரை கிண்டல் பன்னுவர்களை என்ன பண்ணுவது? ஐயா, ஆசிரியர் அவர்களே நீங்கள் இந்த இந்திய மண்ணில் ஒரு மகாத்மா காந்திக்கு சமம். தொடருங்கள் உங்கள் பணிஜினை. வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
19-ஜன-201319:04:41 IST Report Abuse
Venkatesh R Venkatesh ம்...இவரோட சேவையையும் குறை சொல்லுகிறார்களே...தமிழன்டா ??????
Rate this:
Share this comment
Cancel
v.santhakumar - madurai,இந்தியா
19-ஜன-201312:14:04 IST Report Abuse
v.santhakumar பண்டைய காலத்தில் சிரமதானம் என்று ஒரு செயல் இருந்தது அது இப்போது இல்லை ஆனால் வாத்தியார் மறக்க வில்லை நன்றி வாத்தியார்
Rate this:
Share this comment
Cancel
PM Rani - new delhi,இந்தியா
19-ஜன-201306:19:15 IST Report Abuse
PM Rani தலைமை ஆசிரியர் கக்கூஸ் கழுவினால் அதற்குப் பாராட்டா? எதற்கு? இதெயெல்லாம் ஒரு நியூஸ் ஆக மாற்றிய தமிழர்களை என்ன சொல்ல?
Rate this:
Share this comment
joel - saveriyarpattinam,இந்தியா
19-ஜன-201309:11:44 IST Report Abuse
joelenna solrenga sister இது எவளவு பெரிய விஷயம் .இன்றும் பள்ளிக்கு வராமல் இருக்கும் டீச்சர் மாதிஎல் இவர் evalavu periya all theriuma un gal pillaigal matriculationla patikutha athan iduvellam theriyala ungaluku ........இப்படி தமிழர்களை குறை சொல்லியே நம்மை இழிவு படுத்துகிறோம் சரியாய் புரிந்துகொள்ளுங்கள் சிஸ்டர்...
Rate this:
Share this comment
gulf.yogi @gmail.com - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜன-201310:06:58 IST Report Abuse
gulf.yogi @gmail.comஅட புண்ணாக்கு.....
Rate this:
Share this comment
Cancel
குமார் - பெங்களூரு,இந்தியா
19-ஜன-201306:10:29 IST Report Abuse
குமார் ஒரு தலைமை ஆசிரியரா நீங்க தோற்றுவிட்டீர்கள், உங்கள் பொறுப்பு உங்களுக்கு தெரியவில்லை என்பதை மறைமுகமாக ஒத்து கொள்கிறீர்.அவர் அவர் கடமையை அவர்களே செய்தாக வேண்டும்.இன்று துப்புரவு நாளை கிளார்க் வேலை நாளை மறுநாள் வாட்ச் மேன் என்று கூடி கொண்டே போகும். மற்றவர் நம்மை இளிச்சவாயன் ஆக்கிவிடுவான். உண்மையில் வருந்த கூடிய செய்தி, தயவு செய்து சிந்தித்து செயல்படவும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை