விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம், பெண்ணாடம், கம்மாபுரம், திட் டக்குடி பகுதிகளில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர அவைத் தலை வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் (பொறுப்பு) சந்திரகுமார் முன்னிலை வகித்தார். நகர செயலர் கலைச்செல்வன் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். தொகுதி கழகச் செயலர் அருளழகன், நகர எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் சண்முகம், நகர மாணவரணி செயலர் செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

கருவேப்பிலங்குறிச்சியில் அ.தி.மு.க., ஊராட்சி செயலர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஜெ., பேரவை செயலர் ரவிச்சந்திரன் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்தார்.கம்மாபுரம்: கம்மாபுரத்தில், ஊராட்சி செயலர் மணிவண்ணன் தலைமையில் சேர்மன் செல்வராஜ், சிலைக்கு மாலை அணிவித்தார். கிளைச் செயலர் ராதா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கோபாலபுரத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலர் ராஜா, நிர்வாகிகள் பரமகுரு, பாலமுருகன், சரவணன் பங்கேற்றனர்.
ஊ.மங்கலத்தில் ஊராட்சி செயலர் சிவசுப்ரமணியன், கவுன்சிலர்கள் கலியமூர்த்தி, அரங்கநாதன், வனிதா சசிகுமார், ராஜபாண்டியன், கிளைச் செயலர்கள் கந்தசாமி, பெரியசாமி, ரமேஷ் பங்கேற்றனர்.பெண்ணாடம்: பெண்ணாடத்தில், பேரூராட்சி சேர்மன் மதியழகன், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்தார். டாஸ்மாக் தொழிற் சங்க இணைச் செயலர் மதிகோபி, ஜெ., பேரவை சேகர், சிறுபான்மை பிரிவு பாபு, நிர்வாகிகள் வேல்முருகன், மாசிலாமணி பங்கேற்றனர்.நல்லூர் தெற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமையில், முன்னாள் இளைஞரணி செயலர் சரவணன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் சத்தியமூர்த்தி உட்பட பலர் மாலை அணிவித்தனர்.பெ.பொன்னேரியில், ஒன்றிய இளைஞரணி செயலர் முத்து கொடியேற்றினார். ஜெ., பேரவை நிர்வாகிகள் ரங்கராஜ், கோவிந்தராஜ், கிளைச் செயலர் வீராசாமி பங்கேற்றனர்.வெண்கரும்பூரில், திட்டக்குடி தொகுதி இணைச் செயலர் சுந்தரமூர்த்தி, எம்.ஜி.ஆர்., படத் திற்கு மாலை அணிவித்தார்.திட்டக்குடி: பேரூராட்சி அலுவலக வளாகத்தில், சேர்மன் நீதிமன்னன் தலைமையில், துணை சேர்மன் மருதை மணி, தொகுதி செயலர் மதியழகன், நகர தலைவர் தங்கராசு, மாவட்ட மகளிரணி இணைச் செயலர் குணசுந்தரி தங்கராசு, முன்னாள் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர்.கீழ்ச்செருவாயில் மாவட்ட கவுன்சிலர் எழிலரசன், எம்.ஜி. ஆர்., படத்திற்கு மாலை அணிவித்தார். வையங்குடியில் ஊராட்சி தலைவர் காசி ரமேஷ், திட்டக்குடி பஸ் நிலையத்தில், ஜெ., பேரவை நிர்வாகி முருகன் மாலை அணிவித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.போத்திரமங்கலத்தில், கடலூர் மாவட்ட (மேற்கு) அ.தி. மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் இளங்கோவன் தலைமையில் அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலர் தர்மராஜ், மாவட்ட மாணவரணி செயலர் வழக்கறிஞர் செந்தில்குமார், வழக்கறிஞர் முத்தழகன் எம். ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்