கடலூர்:""மனிதனைத்
தேடுவதும், சக மனிதனை நேசிப்பதுமே இலக்கியம்'' என எழுத்தாளர் பிரபஞ்சன்
பேசினார்.கடலூர் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப்புத்தாண்டு பெருவிழா கடலூர்
டவுன் ஹாலில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்ச்சங்கத் தலைவர் சனார்த்தனம்
தலைமை தாங்கினார். செயலர் பேராசிரியர் குழந்தை வேலனார் வரவேற்றார்.
ஞானபாரதி தொகுத்து வழங்கினார்.துணைச் செயலர் எழிலேந்தி செயலறிக்கை
வாசித்தார். ஜெகதீசன், பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் சாகித்திய
அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் பேசியதாவது:அரசியலில் இன்னோர்
வடிவம் தான் இலக்கியம். எந்த ஒரு இலக்கியம் மனிதனைத் தேடுகிறதோ அதுதான்
இலக்கியம். வாழ்க்கையை அனுசரிப்பதே இலக்கியம்.பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆண், பெண் என்ற பேதத்தால் தான்
நடக்கிறது. உலகத்தில் அனைத்து நாடுகளிலும், ஒருவருக்கு குழந்தை பிறந்தால்,
"குழந்தை பிறந்துள்ளது' என்றுதான் கூறுவார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்
தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது; பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற பேதம்
பார்க்கப்படுகிறது.பெண்களுக்கு எதிரான வன்முறையைக் காரணம் காட்டி,
பெண்களுக்குரிய இடம் சுருக்கப்படுகிறது. பெண்கள் அணியும் ஆடை இப்படிதான்
இருக்க வேண்டும் எனக்கூற யாருக்கும் உரிமை இல்லை.ஆணையும், பெண்ணையும் மனோ
ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்த அளவிற்கு பிரித்து வளர்க்கின்றோமோ அந்த
அளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறை வளரத்தான் செய்யும்.இவ்வாறு
பிரபஞ்சன் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.