Advertisement
வலுவான சமுதாயத்தை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்: அழகிரி எம்.பி.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013,00:37 IST

நெல்லிக்குப்பம்:""வலுவான சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும்'' என அழகிரி எம்.பி., பேசினார்.நெல்லிக்குப்பத்தில் நடந்த பொங்கல் விழா விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி விடிவெள்ளி விளையாட்டுக் குழு சார்பில் 34 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் கெய்க்வாட்பாபு முன்னிலை வகித்தார். விளையாட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீதர் வரவேற்றார்.

காங்கிரஸ் நகர தலைவர் திலகர் தி.மு.க., அங்கமுத்து, ராம்சிங், தாசில்தார் சரவணன், செயலர் பிரகாஷ், முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அழகிரி எம்.பி., பரிசு வழங்கிப் பேசியதாவது:உலகிலேயே கல்விக் கடன்
கொடுப்பது காங்கிரஸ் தலைமையான இந்திய அரசுதான். இதுவரை 50 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கிராமத்தில் கோவிலைவிட பள்ளிக்கு முக்கியத்துவம் தந்தவர் காமராஜ், நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டது. இலவசமாக பணம் கொடுக்காமல் இருக்கவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. சம்பளம் முழுமையாக கிடைக்கும் வகையில் வங்கியில் செலுத்தப்படுகிறது.தமிழ்நாட்டில் ஜாதிச் சண்டை அதிகமாகி வருகிறது. வலுவான சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும்.இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Matt pillai - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-ஜன-201315:06:07 IST Report Abuse
Matt pillai எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாணவர்களுக்கு கல்வி கடன் (students லோன்) இங்கேயும் கொடுக்கபடுகிறது. இந்தியாவில் மட்டும் என்பது உண்மையல்ல...வேறு நாடுகளிலும் இருக்கலாம். அழகிரி உலகம் தெரியாதவரா இருக்காரே ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Raja Singh - Chennai,இந்தியா
19-ஜன-201313:12:24 IST Report Abuse
Raja Singh சரிங்க இன்றைய கல்வி கற்கும் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி நன்றாய் கிடைக்கவும் , படித்து முடித்த இளைங்கர்கள் தங்களது வாழ்வாதரதத்துக்கும் ,சமூகத்துக்கும் தங்களது பயனுள்ள கடமைசெய்ய முதலீடிற்கு வழிவாகைசெய்யுங்கள் , உங்களுக்கு நன்றாய் தெரியும் உயர்ந்தவர் மேலும் உயர தான் பல திட்டங்களும் , உங்கள் கட்சி ஆளும் மத்திய பட்ஜெட்டிலும் , சும்மா மைக்கிடைசிடுச்சுனு அமைதியாய் வாழும் எங்களிடம் அரசியல் பண்ணாதீர்கள் மூழ்கி கொண்டிருக்கும் கப்பலின் ஊழியரே ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.