நடுவீரப்பட்டு:பண்ருட்டியில் வரும் 20ம் தேதி மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி வீரர்கள் தேர்வு நடக்கிறது.கடலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகச் செயலர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட வீரர்கள் தேர்வு வரும் 20ம் தேதி பண்ருட்டி ஜான் டூயி பள்ளியில் நடக்கிறது.போட்டிகள் 10, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளின் கீழ் நடக்கிறது.போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வயதிற்கான சான்று பெற்று வந்தால் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்வு பெறும் சிலம்பாட்ட வீரர்கள், அடுத்த மாதம் மாநில அளவில் திருநெல்வேலியில் நடக்கும் சிலம்பாட்ட போட்டிகளில் பங்கு பெற தகுதி உள்ளவர்கள் ஆவர்.மேலும் விவரங்களுக்கு 94862 62965 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.