விழுப்புரம்:விழுப்புரம்
மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
கொண்டாடப்பட்டது.விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன் உள்ள எம்.ஜி.ஆர்.,
சிலைக்கு சேர்மன் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட
இளைஞரணி செயலாளர் பசுபதி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், பேரவை
பொருளாளர் ரகுநாதன், நகர தலைவர் அன்பழகன், கவுன்சிலர் வேங்கடபதி, பாலாஜி
ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
விழுப்புரம் மந்தக்கரை திடலில்
முன்னாள் கவுன்சிலர் ஜான கிராமன் தலைமையில் எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை
அணிவித்தனர். விழுப்புரம் வழுதரெட்டி அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம்
முன் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு
தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவைத்தலைவர் மதுரை கண்ணு,
பிரதிநிதி முனுசாமி, சிறுபான்மை பிரிவு அப்துல் ரகீம், பாசறை செயலாளர்
செல்வம் உடனிருந்தனர்.செஞ்சி: கூட்ரோட்டில் நடந்த விழாவில் நகர செயலாளர்
சுரேஷ்பாபு, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்தார். நகர அவைத்தலைவர்
பசுபதி கொடியேற்றினார். கவுன்சிலர் வெங்கடேசன், வழக்கறிஞர் ரங்கநாதன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன் தலைமையில்
செட்டிப்பாளையம் குளக்கரை, பஸ் நிலையம், சந்தைமேடு, தேசூர் பாட்டை,
சிறுகடம்பூர் ஆகிய பகுதிகளில் அன்னதானம் வழங்கினர். மாவட்ட மருத் துவ அணி
செயலாளர் டாக்டர் ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் தணிகாசலம் மற்றும்
பலர் பங்கேற்றனர்.செஞ்சி பி.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சியில்
ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்தார்.
ஒன்றிய சேர்மன் லட்சுமி சேகர், தொழிற்சங்க நிர்வாகி கன்னியப்பன் மற்றும்
பலர் கலந்து கொண்டனர்.கணக்கன்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட
கவுன்சிலர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கிருஷ்ணமூர்த்தி,
ஒன்றிய கவுன்சிலர் வெங்கிடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வல்லத்தில்
நடந்த விழாவில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகளை ஒன்றிய சேர்மன் அண்ணாதுரை
வழங்கினார். துணை சேர்மன் பரிமளா பன்னீர் செல்வம், மாவட்ட கவுன்சிலர்கள்
வெங்கடேசன், மஞ்சுளா குமார், ஊராட்சி தலைவர் விநாயகம் கலந்து
கொண்டனர்.ஆனாங்கூரில் முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி,
எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். ஊராட்சி
தலைவர் கஸ்தூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பூங்குணம்: விக்கிரவாண்டி
ஒன்றியம் பூங்குணம் கிளை சார்பில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு தொகுதி
செயலாளர் ரங்கநாதன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விக்கிரவாண்டி:
பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு நகர செயலாளர் லோகையன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு எம்.ஜி.ஆர் .,படத்திற்கு மாலை
அணிவித்தார்.திண்டிவனம்: காந்தியார் திடலில் நடந்த விழாவில் சேர்மன்
வெங்கடேசன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் எம்.ஜி.ஆர்.,
படத்திற்கு மாலை அணிவித்தனர்.இதேபோல் ஜெ., பேரவை சார்பில் நடந்த
நிகழ்ச்சிக்கு மாவட்ட இணை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். அரிதாஸ்
எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில்
ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.வானூர்: திருச்சிற்றம்பலம்
கூட்ரோட்டில் நடந்த விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி தலைமை
தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் பக்தவச்சலம், துணை செயலாளர் ராஜகோபால்,
ஊராட்சி தலைவர்கள் அறிவழகன், குமார் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.கிளியனூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் முருகன் தலைமை
தாங்கினார். நிர்வாகிகள் சிவக்குமார், பரசுராமன், சுப்ரமணி, சேகர்,
ஆறுமுகம், ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.