வேதாரண்யம்: நாலுவேதபதி கடற்கரையில், ஆறு அடி நீளமும், 100 கிலோ எடையுள்ள டால்பின் மீன் ஒன்று காயத்துடன் கரை ஒதுங்கியது.
வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடற்கரையில் தற்போது டால்பின் மீன்கள் துள்ளி குதித்து, விளையாடி வருகின்றன. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் நாலுவேதபதி கடற்கரையில் குட்டி டால்பின் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இதில், படகின் பிரபுல்லரில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாகை வனத்துறையினர் ரவீந்திரன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இதே பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட அபூர்வ ஆமை இனத்தைச் சேர்ந்த ஆலிவ்ரெட்லி கடற்ஆமைகளும், இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடந்த, பதினைந்து நாட்களுக்கு முன் வேதாரண்யம் பகுதியிலுல் கடற் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இதுகுறித்து வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.