SETC set collected Rs 2.98 core on singleday | ஒரே நாளில் ரூ.2.98 கோடி வசூல் : சிறப்பு பஸ் மூலம் எஸ்.இ.டி.சி., புதிய சாதனை| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (27)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம், வசூலில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், தினமும், 975 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் மூலம் தினசரி, சாரசரி வருவாய், 1.35 கோடியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.,11 முதல் ஜன.,17 வரை, அனைத்து பஸ்களின் முன்பதிவுகளும் முடிவுக்கு வந்தன.அதை அடுத்து, தமிழக அரசின் உத்தரவுப்படி, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு

பஸ்கள் இயக்கத்தின் மூலம், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் மோகன்,கிளை மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை விபரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.அந்த வகையில், ஜனவரி, 11ம் தேதி, 1,103 பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம், 1.85 கோடி ரூபாய் வசூல் தொகையாக கிடைத்துள்ளது. ஜனவரி, 12ம் தேதி, 1,122 பஸ்கள் இயக்கப்பட்டதன்

Advertisement

மூலம், 2.98 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.விரைவுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதல் முறையாக, 2 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்குகாரணமாக இருந்த கிளை மேலாளர்கள், டிரைவர், கண்டக்டர்கள், நேரம் காப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், டெக்னீசியன் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, ஜன.,13 முதல் ஜன.,16 வரை, அனைத்து பஸ்களிலும் வருவாய் அதிகரித்தே காணப்படுகிறது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raajai-Tamilan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜன-201313:46:43 IST Report Abuse
Raajai-Tamilan சரி செலவு .......எங்கே?
Rate this:
Share this comment
Cancel
Krishnan Venkataramani - Prague,செக் குடியரசு
18-ஜன-201319:55:50 IST Report Abuse
Krishnan Venkataramani வெரி குட் நல்ல விஷயம். அரசுக்கு வாழ்த்துக்கள். வண்டிகளை பராமரித்து தினமும் ஓட்டினால் மக்களுக்கும், அரசுக்கும் நல்ல பயன். கர்நாடகாவை பார்த்து நீங்களும் கற்றுகொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kaliyaperumal govinderaju - vilupuram,இந்தியா
18-ஜன-201319:34:39 IST Report Abuse
kaliyaperumal govinderaju எப்படியே போங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
18-ஜன-201318:52:40 IST Report Abuse
ram prasad இதே போல பொங்கல் மற்றும் விடுமுறை தினங்களில் சிறப்பு டாஸ்மார்க் கடைகள் திறந்தா இன்னும் நிறைய வருமானம் வரும் விடுமுறை தினங்களில் பள்ளிகள் கூட விடுமுறை தான் , எனவே அவற்றை கூட பயன்படுத்தி கொள்ளலாம் அரசுக்கு வருமானம் தானே யோசிக்குமா arasu ?
Rate this:
Share this comment
Cancel
Gogulaa - Thiruthuraipoondi,இந்தியா
18-ஜன-201318:42:14 IST Report Abuse
Gogulaa அரசு பேருந்திற்கு வருமானம் என்பதைவிட இந்த பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். மிக சிறப்பான ஏற்பாட்டில் போக்குவரத்து கழகம் தன் தூக்கத்தை விட்டு எழும்பி தன் யானை பலத்தை காட்டியது. பொங்கல் என்று மட்டுமல்ல திரும்ப சென்னைக்கும் அதேபோல சிறப்பு பஸ்களை இயக்கியது. எங்கள் ஊரிலிருந்து மட்டும் காணும் பொங்கல் முதல் சென்னைக்கு ஒரு நாளைக்கு 16க்கும் அதிகமான பஸ்களை இயக்கி ஓம்னி பேருந்தில் கொள்ளை லாபம் பார்க்க இருந்தவர்களின் கனவுகளை தவிடுபடியாக்கியது. சிறந்த நிர்வாகத்தாலும் உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்ய முடியும். ஆட்சியாளர்களின் இந்த செயலுக்கு ஒரு வந்தனம்.
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
18-ஜன-201316:12:20 IST Report Abuse
dori dori domakku dori அதுவும் இந்த வண்டீக .........ஸ்பீட் பிக் up பன்னசே வரும்........ டக டகா , டொக , டொகா சௌண்டு ......, ஒரே தலைவேதனை கர்மாந்திரம் அந்த கியர் லிவர பிச்சி கடாசலமானு ஒரு கோவம் பாருங்க அதுகுள விகரவாண்டி மண் வாசனை நம்ம கோவத்தை வேற ரூட்டுல divert பண்ணும்
Rate this:
Share this comment
Cancel
d.karthick - mumbai,இந்தியா
18-ஜன-201315:28:13 IST Report Abuse
d.karthick டப்பா பஸ்கள் எல்லாம் சொகுசு ,விரைவு ,சிறப்பு என போர்டை மட்டும் மாற்றி போட்டு கொண்டு அதிகமான கட்டணத்தோடு ஓட்டினால் 2 கோடி என்ன 4 கோடி கூட வசூல் ஆகும் பாவம் தமிழ் நாட்டுமக்கள் . ஆனாலும் government பஸ் மட்டும் Rs .8650 கோடி நஷ்டம் . சூப்பர் தமிழ் நாடு .
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
18-ஜன-201313:06:28 IST Report Abuse
saravanan என்னது... ஒரே நாள்ல 2 கோடி வருமானமா??? ஆம்னி பஸ் ஓனருங்க எல்லாம் சீக்கிரம் பொட்டியை ரெடி பண்ணுங்கப்பா..... அப்பத்தான் ஏதாவது காரணம் சொல்லி பேருக்காவது ரோட்டுல ஓடிக்கிட்டிருக்கிற பேருந்துகளை நிறுத்த முடியும்.... ஆள்பவர்கள் ஆசி இல்லைன்னா உங்க கதி அதோகதிதான்...... ஒழுங்கா பொட்டி வரலைன்னா வருசத்திற்கு ஒரு நாளோ, ரெண்டு நாளோ வருமானம் வர்றா மாதிரி நடத்துற போக்குவரத்து கழகத்தை தினமும் லாபத்தில ஓடுற மாதிரி பண்ணிடுவோம்... ஜாக்கிரதை..
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
18-ஜன-201312:29:43 IST Report Abuse
Ashok ,India நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்து வரும் காலங்களில் ஒரு மதத்திற்கு முன்னதாக இடவசதி பதிவு செய்யும் நிலையை கொண்டு வந்தால் அரசுக்கும் லாபம்,மக்களுக்கும் லாபம். மேலும் நகரில் ஓடும் ஷேர் ஆடோக்களை தடை செய்து அரசே மினி பஸ் இயக்கினால் லாபம் கூடுவதோடு போக்குவரத்து நெரிசலும், விபத்தும் குறையும். வேலைக்கு செல்லும் மக்களுக்கு ஷேர் ஆடோக்களால் ஏற்படும் தொல்லைகளை அரசு எப்போது கண்டு கொள்ள போகிறது??
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
18-ஜன-201311:35:49 IST Report Abuse
christ டப்பா பஸ்கள் எல்லாம் சொகுசு ,விரவு ,சிறப்பு என போர்டை மட்டும் மாற்றி போட்டு கொண்டு அதிகமான கட்டணத்தோடு ஓட்டினால் 2 கோடி என்ன 4 கோடி கூட வசூல் ஆகும்
Rate this:
Share this comment
Jeeva - Trichy,இந்தியா
18-ஜன-201317:33:00 IST Report Abuse
Jeevaஎன்ன தான் 2 கோடி , 4 கோடி நு வசூல் வந்தாலும் போக்குவரத்துக்கு துறைக்கு இருக்க கடன் என்னைக்கும் குறையாது. மக்கள் கிட்ட இருந்து இன்னும் சுரண்ட தான் அரசு நெனைக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.