ஏழை மக்களின் சாபத்தை வாங்காதீர்கள்: மத்திய அரசுக்கு கருணாநிதி அறிவுரை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் முடிவு தவறானது என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தினால், ஏழை மக்களின் சாபத்திலிருந்து மத்திய அரசு தப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். டில்லியில் நேற்று பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இது போல, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் எண்ணிக்கையை 6லிருந்து 9 ஆக உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டது. டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதியளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இஷ்டம் போல் டீசல் விலையை ஏற்ற இம்முடிவு வகை செய்யும் என பா.ஜ., கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமாஜ்வாடி, பகுஜன் உள்ளிட்ட மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை உண்மையாக்கும் விதமாக, நேற்றே டீசல் லிட்டர் ஒன்றிற்கு 50 பைசா உயர்த்தப்பட்டது.


இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையை அளிக்கும் மத்திய அரசின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 5.63 உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மாதம் தோறும் டீசல் விலை 40 முதல் 50 பைசா வரை அதிகரிக்கும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் முடிவு பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அது ஏழை மக்களை மிகவும் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.


இதே போல், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்து வருவதாகவும், தற்போது 6லிருந்து 9 ஆக உயர்த்தப்பட்டுள்ள சிலிண்டர்களின் எண்ணிக்கையை, மாதம் ஒன்று வீதம் 12 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் அதிகப்படியான சுமையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கூறியுள்ள அவர், இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சாபத்திலிருந்து மத்திய அரசு தப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (131)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - banglore,இந்தியா
19-ஜன-201314:18:12 IST Report Abuse
karthi எங்கப்பா அந்த மரியா அல்போன்சா வ காணோம்
Rate this:
Share this comment
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
19-ஜன-201315:12:49 IST Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு@karthi ஹ..ஹ..ஹ.. அவரோட 7000 கம்மென்ட்சையும் பொய் பாருங்க.. எல்லாம் ஒரே திமுக பிரசாரம்தான், நடுவுல நடுவுல காங்கிரசுக்கு வேற. எனக்கு என்னமோ அதிக லோ ரேட்டிங் வாங்கிறது யாருன்னு தினமலர் பரிசு அறிவிச்சா, அவருதான் முதல் இடம். திமுக வுல மாச சம்பளம் வாங்குராருன்னு நினைக்கிறன். விடுங்க பாஸ் யாரும் அவர கண்டுகிறது கிடையாது. பேர பார்த்த ஒடனே லோ லோ ரேட்டிங் பிக் பண்ணிட்டு, பிற எல்லா நேர்மையான வாசகர்களின் கருத மட்டும் படிக்கிறது. இங்கு கட்சி சாரதா வாசகர்களே அதிகம். "ஆயிரம் களத்துக்கு ஒரு அந்து" இருக்கத்தான் செய்யும்...
Rate this:
Share this comment
Cancel
k- sathis kumar - bangalore,இந்தியா
19-ஜன-201313:51:33 IST Report Abuse
k- sathis kumar நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் எல்லோரும் பாத்துக்குங்க நானும் பெரிய ரௌடிதான் .
Rate this:
Share this comment
Cancel
chandru - Tirupattur,இந்தியா
19-ஜன-201312:31:28 IST Report Abuse
chandru எந்த ஒரு அரசும், தன் மக்கள் நலம் மற்றும் தன் நாட்டு முன்னேற்றத்திற்காக முற்போக்கு சிந்தனையுடன் செயல் பட வேண்டும்... அப்படி செயல் பட வில்லை என்றால்...அப்படி செயல் படாத அரசை நடத்துபவர்கள் , நடத்தியவர்கள் ஏழை மக்களின் பாவத்திலிருந்து தப்பமாட்டர்கள்அவார்கள் இந்த மனித பிறவிலேயே தன் பாவத்தை அனுபவிப்பார்கள்....பாவம் அதிகமானால்???? கடவுள் அவர்களின் ஆயுளை அதிகரித்து பாவத்தை அனுபவிக்க செய்வார் அல்லது அவர்களின் வாரிசு அப்பாவத்தை அனுபவிக்க வேண்டிவரும்..... நன்கு சிந்தித்து தன் அரசை நடத்தினால் அவர்களுக்கும் அவர்கள் சுற்றத்திற்கும் நன்று....
Rate this:
Share this comment
Cancel
chandru - Tirupattur,இந்தியா
19-ஜன-201312:25:44 IST Report Abuse
chandru எந்த ஒரு அரசும், தன் மக்கள் நலம் மற்றும் தன் நாட்டு முன்னேற்றத்திற்காக முற்போக்கு சிந்தனையுடன் செயல் பட வேண்டும்... அப்படி செயல் பட வில்லை என்றால்...அப்படி செயல் படாத அரசை நடத்துபவர்கள் , நடத்தியவர்கள் ஏழை மக்களின் பாவத்திலிருந்து தப்பமாட்டர்கள்அவார்கள் இந்த மனித பிறவிலேயே தன் பாவத்தை அனுபவிப்பார்கள்....பவம் அதிகமானால்????
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
19-ஜன-201312:22:59 IST Report Abuse
thirumalai chari சாபத்தின் விளைவினை இன்று இவரன்றி யாரறிவார்.
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar - Chennai,இந்தியா
19-ஜன-201309:51:46 IST Report Abuse
Arun Kumar "ஐயா" தயவு செய்து ஏழை மக்கள் பேரை சொல்லி உங்கள் அரசியல் வண்டிய ஒட்டாதீர் .
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
19-ஜன-201309:46:56 IST Report Abuse
sitaramenv நாற்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டிலும் மத்தியிலும் பதவிகளை பெற்று ஓட்டு போட்ட மக்களை மொத்தமாக மடையர்கள் ஆக்கி ....அவ்வப்பொழுது ஏதோ கவலைப்படுவதுபோல் ...காட்டுமிராண்டி தனமான அரசியல் வசனங்களை பேசி ஏமாற்றுவது இவருடைய வழக்கமாகி விட்டது. இந்த மனிதரை ஒட்டு மொத்த தமிழர்களும் நன்றாக புரிந்து கொண்டு விட்டார்கள். கனி மொழிக்கும் அழகிரிக்கும் பதவிக்காக சோனியா காலடியில் விழும் இவர்.....பல நன்மைகளை செய்ய உண்மையிலேயேர் நினைத்திருந்தால் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக சொல்லி இருக்கலாம். கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கொள்ளை குடும்பத்தை எப்படியாவது காப்பற்றிக்கொள்ள இன்னும் கொஞ்சம் அரசியல் இந்த தேச துரோகிக்கு தேவையாக உள்ளது. உனது வசனங்களையும் ஆறுதல் மொழிகளையும் ஆதரவு பேத்தல்களையும் கேட்டு புளித்து பொய் விட்டது. சீக்கிரம் எங்கேயாவது தமிழ் நாட்டை விட்டு அரசியலை விட்டு பொய் தொலை. தமிழகம் நிம்மதி அடையும்.
Rate this:
Share this comment
Cancel
Abdul Khader - Melapalayam,இந்தியா
19-ஜன-201309:27:38 IST Report Abuse
Abdul Khader ரயில் கட்டணம் கூடியபோது சாபம் இடாத மக்கள் டீசல் உயர்வுக்கு அமைதி காப்பார்கள்.விலை உயர்வு பற்றி கவலை படும் கட்டுமரம் ரயில் கட்டணம் உயர்வுக்கு வக்காலத்து வாங்கினார் ,காரணம் மக்கள் தன்னை போல திருட்டு ரயில் ஏறி பயணம் செய்வார்கள் என்று நினைத்து இருப்பார் போலும்
Rate this:
Share this comment
Cancel
udanpirappu3 - chennai ,இந்தியா
19-ஜன-201307:34:46 IST Report Abuse
udanpirappu3 ஜெயலலிதா மத்தியில் கூட்டணியாக இருந்த போது எந்த விலைகளையும் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ விலை ஏற்றவில்லையா ??? அ தி மு க தலைமை தான் அப்படி என்றால் அதன் தொண்டர்களான நம்ம சேகரனை போன்றவர்களும் அப்படித்தானோ ??? இன்றைய பத்திரிகைகள் எல்லாவற்றையும் திரித்து திரித்து வெளியிடுவதால் வரும் பிரச்சனை . இவர்களாகவே ஆணவம்,பாய்ச்சல்,கண்டனம்,கெஞ்சல்,நம்பிக்கை,,etc என சம்பம்ந்தம்மில்லாமல் வெளியிட்டு உருவாக்கும் செயல் .இங்கே கலைஞர் சொன்னார் என சொல்லும் வருடிகள் ஜெயலலிதா எல்லா கட்டணங்களையும் 80% மேல் ஏற்றும் போது வாயில் எதை வைத்து இருந்தீர்கள் ??? அன்று 25 பைசா ஏற்றும் போது தமிழ்நாடே கொந்தளிப்பு என வர்ணித்த ஊடகங்கள் ,இன்று வாய் மூடி மௌனம் ஏன் ????கலிகாலம் முத்திடுச்சோல்லையோ ????? நியாத்தை சொல்லும் கலைஞரை விமர்சிப்பது ஏனோ??????
Rate this:
Share this comment
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
19-ஜன-201315:36:47 IST Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு@Giri srinivasan, நியாயத்தை யாரு வேணும்னாலும் பேசிடலாமா? அதுக்கு ஒரு அருகதை வேண்டாமா? ஜெயலலிதா தான் சிறந்ததுன்னு இங்கு யாரு சொல்லுறா? ஆனா இவருக்கு ஜெயலலிதா தேவலைதான். ஆனா சிறப்பானதல்ல . இவரு சொல்லுறது எப்படி இருக்குன்னா "நாய்க்கு பயந்து புலி குகைக்குள்ள ஓடுன" கதையா இருக்கு. இவேரெல்லாம் பேச கூடாது. இவரால் ஆன பாதிப்பு ரொம்ப ரொம்ப அதிகம். 5 அணுகுண்டு தமிழ்நாட்டுல போட்டு இருந்தா கூட மீண்டு இருக்கலாம். ( பின்குறிப்பு: நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை. architecture படித்தாலும், கடன் அடைபதற்காக சவுதி அரேபியா வில், வேலைபார்துகொண்டு, ஊரை பற்றி கனவு கண்டு கொண்டு இருக்கும், ஒரு குடிமகன் )...
Rate this:
Share this comment
Cancel
Sam - Toronto ,கனடா
19-ஜன-201307:10:07 IST Report Abuse
Sam முதலில் உங்களுடைய குடும்ப அரசியலே எங்களுக்கு வேண்டாம், பிறகு நாங்க எல்லாரும் வசதியாக மாறிவிடுவோம். ஏழை என்ற பேச்சிக்கு எடம் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்