சென்னை: தனியார் பல் மருத்துவ கல்லூரி மேல்படிப்புக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக, தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் தலைவர் குணசீலனை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனியார் பல் மருத்துவ கல்லூரி மேற்படிப்புக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றது தொடர்பாக, தமிழ்நாடு பல் மருததுவ கவுன்சில் உறுப்பினர் உள்ளிட்ட 4 பேரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் தலைவர் குணசீலன் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், குணசீலனிடம் இன்று சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் குணசீலனை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இன்று அவர் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் அயோக்கியர்களாகவே இருக்கிறார்களே. இதன் மூல காரணம் யார் என்று தெரிந்தும் இன்னமும் அந்த சுயநலவாதிக்கு ஆதரவு தருவதை தமிழர்கள் யோசிக்க வேண்டும். நாடு திருந்த அயோக்கியர்களை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். சில குறுகிய காரணங்களுக்காக இவர்களை ஆதரிப்பவர்களும் நாட்டு நலனிலோ , தமிழர்களின் நலனிலோ அக்கறை இல்லாதவர்கள் ஆகிறார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.