Advertisement
ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்: கவர்னருக்கு ஆலோசகர்கள் நியமனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013,20:47 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 18,2013,20:48 IST

புதுடில்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், பாரதிய ஜனதா - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, சிபு சோரனின், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, கடந்த, 8ம் தேதி வாபஸ் பெற்றது. இதனால், பா.ஜ., முதல்வர், அர்ஜுன் முண்டா, தன் பதவியை ராஜினாமா செய்தார்.




மாநில சட்டசபையை கலைக்கும்படியும், கவர்னர், செய்யது அகமதுவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு கவர்னர், செய்யது அகமது பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை நேற்று பரிசீலித்த, மத்திய அமைச்சரவை, ஜார்க்கண்டில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என, முடிவு செய்தது.


மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவர் நேற்று கையெழுத்திட்டார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. சட்டசபையை முடக்கி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த, 2000ம் ஆண்டில், பீகார் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. அதன்பின், தற்போது, மூன்றாவது முறையாக, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன், 2009 மற்றும் 2010ல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.


ஜனாதிபதி ஆட்சி அமலானதை அடுத்து, ஜார்க்கண்ட் கவர்னரின் ஆலோசகர்களாக, மத்திய உள்துறை முன்னாள் செயலர் மதுக்கர் குப்தா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் டி.ஜி.பி., விஜய்குமார் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விஜயகுமார், தமிழகத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரி. 2004ல் ஆண்டில், சந்தன கடத்தல் வீரப்பன் பிரச்னைக்கு முடிவு கண்டவர்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
19-ஜன-201306:29:02 IST Report Abuse
மதுரை விருமாண்டி சிபுசோரன் அந்த ஊரு டவுசர் தாஸ்..
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
18-ஜன-201321:23:40 IST Report Abuse
Krishnamoorthy Srinivasa Rao நல்ல முடிவு.... குதிரை பேரம் படியாததால் காங்கிரஸ் இப்படி ஒரு முடிவு எடுத்தது என்பதே யதார்த்தம் ..
Rate this:
4 members
1 members
6 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
18-ஜன-201320:55:30 IST Report Abuse
KaNaGaRaJ. S... காங்கிரஸ் அல்லாத ஆட்சி செய்யும் மாநிலதில் ஜனாதிபதி ஆட்சி என்றால் காங்கிரஸ் கட்சிக்கு கசக்கவா செய்யும். உடனே ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த தானே செய்யும்
Rate this:
4 members
2 members
9 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.