மறுசுழற்சிக்கு குப்பை வழங்க மறுக்கிறது ஊராட்சி நிர்வாகம்: தீயிட்டு எரிப்பதால் மாசு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிவகாசி:சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி, குப்பையை மறுசுழற்சி செய்ய முன்வந்த, தன்னார்வ தொண்டருக்கு, குப்பை வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.அதே நேரத்தில் குப்பையை தீயிட்டு எரிப்பதால், சுற்றுசுழலுக்கும் மாசு ஏற்படுகிறது. பாலிதீன்பை பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்து உள்ளது. ரோட்டோரங்கள் எல்லாம் பாலிதீன் என, கழிவு பொருட்கள் பரவலாக காணப்படுகிறது. மழைநீர் கூட நிலத்தில் புக முடியாத அளவிற்கு தடுக்கிறது. சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. பாலிதீன் குப்பையால் அவதிப்படும் உள்ளாட்சி அமைப்புகள், என்ன செய்வது என தெரியாமல் முழிக்கின்றன. குப்பையை பல பகுதிகளில் எரிப்பதால், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது.
இந்நிலையில், சிவகாசி மாரனேரியை சேர்ந்த ராஜாராம் என்பவர், ""சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஊராட்சி குப்பையை, தன்னிடம் கொடுத்தால், அவற்றை மறுசுழற்சி செய்து, பயனுள்ளவையாக மாற்றி காட்டுகிறேன்,'' என கூறி, இதன் முயற்சியில் கடந்த ஒரு ஆண்டாக ஈடுபட்டுள்ளார். ஊராட்சிகள் குப்பையை வழங்க கோரி, முதல்வர், கலெக்டர் என, ஊராட்சி நிர்வாகம் வரை மனுவும் செய்தார்.அதன்படி மறுசுழற்சி செய்ய, உள்ளாட்சி அமைப்புகள், மாசுகட்டுப்பாட்டு வாரியம் பல நிபந்தனைகளை விதித்தது. அதாவது,கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்ய 2 ஏக்கர் நிலம் , மறுசுழற்சி செய்யும் இடத்திற்கும், ஊராட்சிக்கும் 2 கி.மீ., தூரம்,குப்பை கழிவுகளை சொந்த செலவில் எடுத்து செல்தல், சுகாதார கேடு ஏற்படக்கூடாது என, கூறப்பட்டிருந்தது.இவரும்,அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, இரு ஏக்கர் நிலத்தை, ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் குத்தகைக்கு பெற்றுள்ளார். இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து, பல மாதங்களாக குப்பைக்காக காத்திருக்கிறார். ஆனால் குப்பை வழங்க, ஆவணங்கள் அடிப்படையில், ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கினாலும், குப்பை வழங்குவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டுகின்றனர். ராஜாராம் கூறுகையில்,"" நாம் பிறந்த ஊர் மாசுபடுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், என்னால் ஆன முயற்சியாக, குப்பையை மறுசுழற்சி செய்வதில் ஈடுபட்டுள்ளேன். இதற்காக "ஸ்ரீ நாராயணா கழிவு பொருள் மறுசுழற்சி மையம்' ஏற்படுத்தி உள்ளேன்.
ஊராட்சியில் தினமும் சேரும் குப்பையை வழங்கினால் ,அதில் இருந்து 30 வகையான பொருட்களை பிரித்து எடுக்கலாம். மக்கும் குப்பைகளை மண்புழு உரமாக்கவும், மக்காத குப்பைகளில் இருந்து பேப்பர், பிளாஸ்டிக், பாலிதீன், பீங்கான், கல், மண் என, தனித்தனியாக பிரித்து, லாபகரமான தொழிலாக மாற்றுவேன். ஆனால், குப்பையை வழங்க, ஊராட்சி நிர்வாகம் ஒத்துழைக்காமல் ஊதாசீனப்படுத்துகிறது. ஒரே இடத்தில் குப்பையை குவித்து வைக்காமல், அங்கே , இங்கேயும் கொஞ்சமாக கொட்டி எடுத்து கொள் என்கின்றனர். பல இடங்களில் அவர்களே தீ வைத்து விடுகின்றனர் ,'' என்றார். மாரனேரி ஊராட்சி தலைவர் சீனிவாசன் கூறுகையில், ""ஊராட்சியில் இரு துப்புரவு தொழிலாளர்களே உள்ளனர். ஒரே இடத்தில் குவித்து வைக்க முடியாது என்பதால், ஊருக்கு வெளியே கொட்டி தீ வைக்கிறோம். குப்பையை மறுசுழற்சி செய்ய அனுமதி பெற்றும், அவர் எடுத்து செல்லவில்லை,'' என்றார். சுற்றுச்சுழலை பாதுகாக்கும் நோக்கில், ஒருவர் செய்யும் முயற்சிக்கு நாமும் ஒத்துழைத்தால்தான், சுகாதாரமான காற்றும், சுத்தமான நீரும் நமக்கு கிடைக்கும் என்பதையும், நினைவில் கொள்ளவேண்டும்.இது போன்ற தன்னார்வ தொண்டர்களை ஊக்குவித்து,மேலும் பலரை உருவாக்க,அரசும் முன் வர வேண்டும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்