ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ராமநாத சுவாமி சன்னதி முன்புள்ள படியில் பதிப்பதற்கு, வெள்ளியிலான தகடு தயாரிக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சன்னதிக்கு செல்லும், கருவறை படியில் இருந்த வெள்ளி தகடு சேதமடைந்தது. இதை, புதுப்பிக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முயற்சியால், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த சொர்ணாம்பிகா மோட்டார்ஸ் நிறுவனத்தினர், வெள்ளி தகடு அமைக்க முன்வந்தனர். பழைய வெள்ளி கதவுபடி அகற்றப்பட்டு, மூன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலத்தில், வெள்ளியிலான தகடு தயாரிக்கும் பணியில், ஸ்தபதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி விரைவில் முடிந்து, சுவாமி சன்னதி முன்புள்ள படியில் இந்த தகடு பொருத்தப்பட உள்ளது என, கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.