dindigul district news | தீவன பற்றாக்குறையால் கால்நடைகள் பட்டினி:புண்ணாக்கு விலையை குறைக்க வலியுறுத்தல்| Dinamalar

தமிழ்நாடு

தீவன பற்றாக்குறையால் கால்நடைகள் பட்டினி:புண்ணாக்கு விலையை குறைக்க வலியுறுத்தல்

Added : ஜன 18, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திண்டுக்கல்;தீவன பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு உணவு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கவலை தெரிவித்த விவசாயிகள், புண்ணாக்கு, தவிடு விலையை குறைப்பதோடு பால் கொள்முதல் விலையை அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:குளங்களை தூர்வார வேண்டும். கரைகளை பலப்படுத்த வேண்டும். பாதைகளை செப்பனிட வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து ஓய்ந்து விட்டோம். ஒவ்வொரு கூட்டத்திலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கும் அதிகாரிகள் அதற்கு அடுத்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை. *பருவ மழை பொய்த்து விட்டதால் விளை நிலங்கள் வறண்டுள்ளன. மின்தடை காரணமாக கிணற்றிலிருந்தும் நீர் இறைக்க முடியவில்லை. கூட்டுறவு சங்கங்கள் தேவையான நேரத்தில் கடன் வழங்காமல் இழுத்தடிக்கின்றன.* விதை பயிர்களுக்கு மானியம் வழங்குகிறோம். தேவையான இடுபொருட்களை அளிக்கிறோம். காப்பீடு செய்து தருகிறோம் என்று கூறும் அதிகாரிகள் குளங்களையும், கண்மாய்களையும் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். விவசாயிகள் சுட்டிக்காட்டும் பகுதிகளுக்கு நேரில் சென்று குறைகளை கள ஆய்வு செய்து நிவர்த்தி செய்ய வேண்டுமென்ற அக்கறை அதிகாரிகளிடம் இருப்பதாக தெரியவில்லை.* போதுமான தீவனங்கள் இல்லாமல் கால்நடைகள் பட்டினியால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புண்ணாக்கு கிலோ ரூ. 50 க்கும், தவிடு கிலோ ரூ. 10 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை போதுமான அளவிற்கு வாங்குவதற்கான பொரு ளாதார வசதி விவசாயிகளிடம் இல்லை.* ஆவினிலிருந்து பால் ஊற்றுவதற்காக வழங்கப்படும் கேன்கள் சுத்தமானதாக இருப்பதில்லை. உள்ளே பூஞ்சனமும், பாசியும் படர்ந்துள்ளது.
*அந்த பாலை பதப்ப டுத்தினாலும் அதில் உள்ள கெட்ட வாடை போகாது. கேன்களை சுத்தப்படுத்தாமல் தூய்மையான பாலை அசுத்தமாக்கி அதை வெளி விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இது குறித்து ஆவினில் புகார் தெரிவித்தால் கேன்களை சுத்தம் செய்ய எங்களிடம் போதுமான ஊழியர்கள் இல்லை என்று கூறுகின்றனர். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.கலெக்டர் கோபம்: பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக நிவர்த்தி செய்யப்படவில்லை என்று விவசாயிகள் கூறியதால் கோபமடைந்த கலெக்டர் வெங்கடாசலம், அதிகாரிகளிடம் அந்த கோரிக்கைகளின் தற்போதைய நிலை, அதற்காக அதிகாரிகள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து தனக்கு உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அரசு மானியம் இல்லாத கோரிக்கைகளுக்கும் வேறு ஏதாவது வழியில் உதவி செய்ய முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி அதற்கான தீர்வினை விரைவில் தெரிவிப்பதாக கூறினார். நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் இந்த கூட்ட முடிவிலேயே மனு எழுதி தன்னிடம் அளிக்குமாறும், அதற்கான பதிலை அதிகாரிகளிடம் பெற்று அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை தானே நேரில் பார்வையிடுவதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை