விருதுநகர்:நெல் பயிருக்கு பதில், கரும்பு பயிர் என , வி.ஏ.ஓ., க்கள் பதிவு செய்வதால் ,விவசாயிகள் பாதிப்பதாக, குறை தீர் கூட்டத்தில்,விவசாயிகள் புகார் கூறினார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நேற்று நடந்தது. அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பேசியதாவது: ராமச்சந்திர ராஜா(ராஜபாளையம்): புதிதாக நியமிக்கப்பட்ட வி.ஏ.ஓ., க்கள், பயிரடங்கல் கணக்கிடுவதை, அலுவலக அறையில் உட்கார்ந்து, குத்து மதிப்பாக இந்த பயிர் தான் பயிரிட்டுள்ளது என, கணக்கு எழுதுகின்றனர்.
நெல் பயிரிட்டு பாதிக்கப்பட்டவர் விண்ணப்பித்திருந்தால், வி.ஏ.ஓ., க்கள் கரும்பு பயிரிட்டதாக தவறான கணக்கு காட்டுகின்றனர். இன்ஸ்சூரன்ஸ் கிடைக்க வாய்ப்பில்லை. மத்திய மாநில அரசுகள் வழங்கும் மானியமும் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போகும் .ராஜபாளையம், சிங்கமால்புரத்தில் 1500 பனை மரங்கள் இருப்பதாக கணக்கு உள்ளது. ஆனால், ஒரு மரம் கூட இல்லை என்பது ஆச்சர்யமான ஒன்று. விவசாயம் செய்வதற்கு ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் ,டிரான்பார்மர் பழுதானால், விவசாயிகளே பழுதை நீக்கி தர ,மின்சார வாரியம் வற்புறுத்துகிறது. இதற்காக விவசாயிகள், தலா 100 ரூபாய் வீதம் 20 ஆயரம் வசூல் செய்து ,டிரான்ஸ்பார்மரை பழுது நீக்கி கொடுக்கிறோம். இலவச மின்சாரம் கொடுப்பதாக கூறி, விவசாயிகளிடம் மறைமுகமாக பணத்தை பிடுங்குகின்றனர்.ராமசாமி(வத்திராயிருப்பு): பயிர் பாதிப்பு தொடர்பாக ,வேளாண் அதிகாரிகளை விவசாயிகள் சந்திக்க சென்றால் ,அவர்கள் "கேம்ப்' சென்றதாக பதில் சொல்லி அனுப்பி விடுகின்றனர். வயதான காலத்தில், தினம் தினம் அலைந்தாலும் பயனில்லை.
விஜயமுருகன்(விருதுநகர்): டெல்டா மாவட்டத்தை விட தென் மாவட்டத்தில் தான் பயிர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்:டெல்டா மாவட்டத்திற்கு என்ன நிவாரண நிதியோ அதே தான் நமது மாவட்டத்திற்கும் கிடைக்கும்.கூடலிங்கம்(வெள்ளையாபுரம்): புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி பாண்டி இறப்புக்கு அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்க வில்லை .கலெக்டர்: இறப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியாச்சு, அரசு தான் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.