ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பை காட்டிலும், ஜிப்சத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதால் உப்பள உரிமையாளர்கள் சிலர் "ஜிப்சம்' உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இவற்றை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு டன் கணக்கில் அனுப்பி வருகின்றனர். வாலிநோக்கம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், கோப்பேரி மடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பை காட்டிலும், ஜிப்சம் உற்பத்தியில் அதிக வருமானம் கிடைப்பதால் உப்பள உரிமையாளர்கள் சிலர் ஆண்டுதோறும் இத்தொழிலில் மும்முரம் காட்டி வருகின்றனர். கோப்பேரிமடம், திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஜிப்சம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
உப்பள மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தேவிப்பட்டினம் கடற்கரையை ஒட்டியுள்ள கோப்பேரிமடம் பகுதியில், 300 ஏக்கர் பரப்பளவில், 100 ஏக்கரில் உப்பு உற்பத்தியும், 200 ஏக்கரில் ஜிப்சமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, டன் கணக்கில் தூத்துக்குடி அனுப்பப்பட்டு அங்கு சுத்தப்படுத்தப்பட்ட பின், தரம் பிரித்து உள்ளூர் மட்டுமின்றி இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உப்பை காட்டிலும், ஜிப்சத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறு மூலம் உப்பளங்களில், தண்ணீர் பாய்ச்சப்பட்டு, 15 முதல் 24 டிகிரி சூரிய ஒளியில் ஜிப்சம் உற்பத்தியாகிறது. இது, வெளி மார்க்கெட்டில் ஒரு டன், 1,750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிமென்ட் தொழிற்சாலை, பேண்டேஜ் துணி தயாரிப்பு, உரம், சாக்பீஸ் உள்ளிட்ட பல பொருட்களுக்கு மூலப்பொருளாக "ஜிப்சம்' பயன்படுவதால் இதற்கு தனி மவுசு ஏற்பட்டுள்ளது, என்றார்.
ஜிப்சம் என்றால் என்ன? தண்ணீர் அடர்த்தி குறைவாக உள்ளது, "கால்சியம் குளோரைடு' என்றழைக்கப்படும் வேதிப்பொருளே, ஜிப்சம். இது உப்புக்கு முன், சூரிய வெப்பத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜிப்சத்திற்கு அடுத்தக்கட்டமாக தயாரிக்கப்படும் உப்பு(சோடியம் குளோரைடு), தண்ணீரின் அடர்த்தி சற்று அதிகம் கொண்டது. இதற்கு அடுத்தப்படியாக உற்பத்தி செய்யப்படுவது, "மெக்னீசியம் குளோரைடு'(எண்ணெய் வடிவில் இருக்கும்). இதனுடன் சில வேதிப்பொருள்களை கலந்து "எக்ஸ்ரே பிலிம் டெவலப்'பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.