காரைக்குடி:காரைக்குடியில் ரோட்டில் திரியும் ,ன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வெளியூரிலிருந்து வருபவர்கள் சிலர் இரவு நேரங்களில்,மனநலம் பாதித்தவர்களை இங்கு இறக்கிவிட்டு செல்கின்றனர்.இவர்கள் கடைகளின் முன்புறம்,பஸ் ஸ்டாண்ட் பகுதியை,தங்கள் உறைவிடமாக மாற்றி கொள்கின்றனர். காலைக்கடனையும் பஸ் நிற்கும் இடத்திலேயே கழிக்கின்றனர். இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் முகம் சுளிக்கும் அவலம் உள்ளது. நூறடிரோடு, செக்காலை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், வ.உ.சி., ரோடு பகுதிகளில்,உடல் முழுவதும் துணிகளால் சுற்றிக்கொண்டு செல்லும், இவர்கள் ரோட்டில், நின்று கொண்டு நகர மறுக்கின்றனர்.வாகன ஓட்டிகள், கடந்து செல்வதில் சிரமப்படுகின்றனர். சிலர் சிக்னல் அருகே நின்று கொண்டு நகர மறுப்பதால், சிக்னல் விழுந்த பிறகும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன.மகர்நோன்பு பொட்டல் காந்தி சிலை அருகே, நிரந்தரமாக தங்கியிருக்கும், பிச்சைக்காரர், மனநோயாளி ஆகியோர், சிலையை சுற்றி அசுத்தப்படுத்தி வருகின்றனர்.காரைக்குடி விமல் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டில் தங்கியிருப்பவர்கள்,சாப்பிட்டு விட்டு, எச்சிஇலைகளை அருகிலேயே போட்டு விடுகின்றனர். துணிகளை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு,புண்களுடன் டீக்கடை, கூல்டிரிங்ஸ் கடைகளின் முன்பு அமர்ந்து கொள்கின்றனர்.இதனால், பொதுமக்கள் கடைகளுக்கு வர பயப்படுகின்றனர். வருவாய் துறையினர், மனநோயாளிகளை பிடித்து, காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.