மதுரை: காலத்தால் அழியாத இளையராஜாவின் பழைய பாடல்களை, முதன்முறையாக "டி.டி.எஸ்.,' ஒலிப்பதிவில் வெளியிட்டுள்ளனர். அவற்றிக்கு, இசைப்பிரியர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிராம போனிலிருந்து, "கேசட்' முறைக்கு மாறிய பின், "ஸ்டீரியோ' தொழில்நுட்பம் பிரபலமானது. அதன் பின், "டிஜிட்டல்' தொழில்நுட்பம் தலைகாட்டி, "சிடி'க்கள் வரத்தொடங்கின. 5.1 ஒலியை கடந்து, தற்போது 7.1 ஒலிஅமைப்பு நடைமுறையில் உள்ளது. "டேப் ரிக்கார்டர்' உபயோகித்த வீடுகளில், "ஹோம் தியேட்டர்' இடம் பிடித்ததால், பழைய பாடல்களை சுவாரஸ்யமாய் கேட்க முடிவதில்லை. "ரீமிக்ஸ்' முறையில், பாடலின் உண்மை தன்மை, பாதிக்கப்படுகிறது. அந்த குறையை போக்கும் விதமாக, இளையராஜாவின் பழைய பாடல்களை, அதே இசையில், "டி.டி.எஸ்.,' முறையில் ஒலி மாற்றம் செய்து, முதன் முறையாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். வெளியாகி உள்ள நான்கு ஆடியோ "சிடி'களும், "5 டிராக்' மற்றும் "2 டிராக்' என, இரு வடிவங்களில் வெளியாகியுள்ளன. 14 பாடல்கள் கொண்ட ஒரு "சிடி'யின் விலை ரூ.125. மதுரையில் விற்பனைக்கு வந்த ஒரு வாரத்தில், பெரும்பாலான "சிடி'கள் விற்பனையாகியுள்ளன.
மதுரை கீஷ்டுகானம் உரிமையாளர் துளசிராம் கூறியதாவது: இன்ஜினியர் இளையராஜா முத்துசாமி என்பவர், கடும் முயற்சிக்கு பின், இந்த வடிவத்தில் தயாரித்துள்ளார். தற்போதைய தலைமுறை, "டி.டி.எஸ்.,' ஒலியை விரும்புவதால், வந்த வேகத்தில், "சிடி'கள் விற்பனையாகி வருகின்றன, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.