Diesel price hike : Mamata, Mayawati condemned | டீசல் விலை உயர்வுக்கு மம்தா, மாயாவதி கண்டனம்| Dinamalar

டீசல் விலை உயர்வுக்கு மம்தா, மாயாவதி கண்டனம்

Updated : ஜன 20, 2013 | Added : ஜன 18, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டீசல் விலை உயர்வுக்கு மம்தா, மாயாவதி கண்டனம்

ஹரின்காட்டா: ""ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, டீசல் விலையையும், உயர்த்தியிருப்பதன் மூலம் மத்திய அரசு ஏழைகளை சுரண்டுகிறது,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில், நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி கூறியதாவது: ரயில் கட்டண உயர்வு, அதை தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்வு, தற்போது டீசல் விலையும் உயர்த்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக, மற்ற பொருட்களின் விலையும் அதிகரித்து, சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும்.

விவசாயத்திற்கு, டீசல் மூலம் இயக்கப்படும் பம்புகளை பயன்படுத்தும் ஏழை விவசாயிகள், மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே, உரங்களின் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளது. இதை எதிர்த்து, பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும் பதில் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.மாயாவதி எதிர்ப்பு :


உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டீசல் விலையை, நிர்ணயித்துக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத நடவடிக்கை, ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட மக்களை வெகுவாக பாதிக்கும்; விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுவர். மானிய விலை காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்தியது போதுமானதாக இல்லை. ஆண்டுக்கு,12 சிலிண்டர்களாக உயர்த்த வேண்டும்.


தொடர்ந்து விலைகளை உயர்த்துவதை பார்க்கும் போது, காங்கிரசின் சின்னமான கை, ஏழைகளுடன் கை குலுக்குவதாக தெரியவில்லை. பணக்காரர்களுடனும், முதலாளிகளுடனும்தான் கை குலுக்குவதாக தெரிகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு பின், அரசை சுமுகமாக நடத்துவது சிரமமாக இருக்கும் என்பதால், லோக்சபா கலைக்கப்படலாம். இவ்வாறு மாயாவதி கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
19-ஜன-201313:32:38 IST Report Abuse
JALRA JAYRAMAN நிர்வாகம் என்பது வேறு, அரசியல் என்பது வேறு. இரண்டும் ரயில் தண்டவாளம் மாதிரி இணையவே இணையாது. நல்ல நிர்வாகிக்கு மக்களிடம் நல்ல பெயர் இருக்காது அவரால் தேர்தலில் வெற்றி பெறவும் முடியாது
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
19-ஜன-201311:45:45 IST Report Abuse
Guru எவளவோ எதிர்ப்புகளுக்கு இடையேயும், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலையை மனம் தளராமல் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களையும் பிரதமர் திறமையாகக் காப்பாற்றி வருகிறார் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
19-ஜன-201311:32:56 IST Report Abuse
Seshadri Krishnan இந்த மாயாவதி எங்கபோனாலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திர ஹோட்டலில் தான் வாசம், ஆட்சியில் இருக்கும்போது ஹெலிகாப்டர் பயணத்தில் காலணியில் படிந்த தூசி துடைக்க ஒரு ஐபிஎஸ் அதிகாரி, கூடவே அழகுசாதன நிலையம் மற்றும் பணிப்பெண்கள் இவள் ஏழைகளைப்பற்றி கவலைபடுகிராளாம்? கிராதகி.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
19-ஜன-201305:32:10 IST Report Abuse
Skv இவுகளால் ஆனது கண்டனம் செய்வது மட்டுமே ,ஆனால் மக்கள் நிலை தலைக்குமேலே வெள்ளம் ஜான் போனா என்ன முழம்போனா என்ன என்பதே , முடிஞ்சா எதிர்கொள்வோம் இல்லியா ஈரத்துணிய வயத்துலே கட்டிப்போம் என்பதே.கவலைபட்டால் நோய்வரும் அப்போ டாக்டருக்கும் அழனுமே.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
19-ஜன-201301:14:50 IST Report Abuse
NavaMayam டீசல் விலை கூட்டினால் ஏழைகள் பாதிக்க படுவார்கள் என்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் , உங்கள் கட்சி காரர்கள் , ஏழைகளுக்காக அரசு நஷ்ட பட்டு மான்யம் கொடுக்கும் டீசலை தங்கள் கார்களுக்கு பயன் படுத்த கூடாது என்று என்றாவது கட்டளை இட்டு உள்ளார்களா .. அல்லது அரசாங்க அதிகாரிகள் பயன் படுத்தும் கார்களில் பெட்ரோல் தான் உபயோகிக்க வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கிறீர்களா... இல்லை பணக்காரர்கள் எழைகளுக்கான் டீசலை தங்கள் கார்களில் பயன்படுத்தாதீர்கள் , மான்ய கேஸ் சிலிண்டர்களை உபயோகிக்காதீர்கள் , என்று விழிப்பு உணர்ச்சி பிரசாரமாவது செய்துள்ளீர்களா...நீங்கள் என்றோ ரெயிலில் போகும் ஏழைக்காகவா ஒப்பாரி வைக்கிறீர்கள் , ஒட்டு போடும் வாரத்துக்கு மூணு முறை போகும் பணக்காரர்களுக்கு அல்லாவா கண்ணீர் வடிக்கிறீர்கள் ... ஏமாற்று அரசியலை விடுங்கள் , நாட்டுக்கு நல்லது நடக்கும் அரசியலை கடை பிடியுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
19-ஜன-201300:57:40 IST Report Abuse
விருமாண்டி ஒவ்வுறு முறையும் கண்டனம் தெரிவித்தால் உங்கள மாதிரி ஆட்களின் வேலை முடிந்து விட்டது ..மடியில் இருந்து கூரைக்கு வந்து நாங்கள் படும் வேதனையை பாருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
19-ஜன-201300:37:15 IST Report Abuse
NavaMayam இவங்களுக்கு , பஸ்ஸில் போற மற்றும் ரயிலில் போற ஏழைகள் மட்டும்தான் கண்ணில் தெரிகிறது.....பஸ்சிலேயே ஏறாத , ரயிலிலேயே ஏறாத , என் இன்னும் மின்சாரத்தையே ,மின்வெட்டால் அல்ல , இன்னும் வழங்கபடாததால் , பார்க்காத கிராம மக்கள் இருக்கிறார்கள் ... அவர்களை பற்றி எல்லாம் என்றாவது கவலை பட்டு இருக்கிறீர்களா... எம் ஜி ஆர் , சினிமாவில் , இருப்பவனிடம் இருந்து முடியாதவர்களுக்கு கொடுக்கும் பொது கைதட்டுகிறோம்... இங்கு கொடுக்க முடிந்தவனை கொடுக்க வைத்து , அதில் இருந்து கொடுக்க முடியாதவருக்கு கொடுக்க செய்வது தவறா .. இதனால் மிச்ச படும் பணம் இந்த ஏழைகளுக்கு , கல்வி செலவு , சுகாதார செலவு , இவைகளுக்கு பயன் படுத்தலாம் ... படித்தவார்களுக்கு , வேலை செய்ய திறன் உள்ளவர்களுக்கு அரசாங்கம் வேலை வாய்ப்பை பெருக்கி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டுமே அன்றி , வேலை வாய்ப்பை குறைத்து , இலவசங்கள் கொடுப்பதல்ல , சிறந்த நிர்வாகம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை