TN Assembly meet on Jan 28 th | கவர்னர் உரையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா ?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் உரையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா ?

Added : ஜன 18, 2013 | கருத்துகள் (32)
Advertisement
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், சம்பா பயிர் பாதிப்பிற்கான நிவாரணம் குறித்த அதிரடி அறிவிப்புகள், கவர்னரின் சட்டசபை உரையில் இடம் பெறும் என, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், சம்பா பயிர் பாதிப்பிற்கான நிவாரணம் குறித்த அதிரடி அறிவிப்புகள், கவர்னரின் சட்டசபை உரையில் இடம் பெறும் என, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவிரியில் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை திறந்து விட, பல முறை வற்புறுத்தியும், கர்நாடக மாநிலம் விடாப்பிடியாக மறுத்து வருகிறது.

இது தொடர்பாக, தமிழக அரசின் மனுவை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என, சுப்ரீம் @கார்ட் நேற்று மறுத்துள்ளது. மேட்டூர் அணையும் வறண்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரை காப்பாற்ற வழியில்லாமல், தமிழக விவசாயிகள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். விவசாயிகள் துயர் துடைக்க, நிவாரணத் தொகையாக, ஏக்கருக்கு, 13,600 ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டார். தொடர்ந்து, நிதியமைச்சர் பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.


ஜெ., சென்னை திரும்புவார் :

இக்குழுவினர், கடந்த வாரம், டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்தனர். மீதமுள்ள பகுதிகளில், இன்னும் சில தினங்களில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பின், இக்குழுவினர் கூடி, பயிர் பாதிப்புள்ள பகுதிகள் குறித்த அறிக்கையை, இம்மாதம், 23ம் தேதி, அரசுக்கு தாக்கல் செய்யவுள்ளனர். கோடநாட்டில் உள்ள முதல்வர் ஜெயலலிதா, 23ம் தேதி அல்லது, 24ம் தேதி, சென்னை திரும்புவார் என தெரிகிறது. உயர்மட்டக் குழு அளிக்கும், பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை, முதல்வர் ஆய்வுக்குப் பின், நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.


இம்மாதம், 25 மற்றும் 26ம் தேதிகள், அரசு விடுமுறை என்பதால், 28ம் தேதி இந்தாண்டிற்கான சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கும் என தெரிகிறது. டெல்டா மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய்வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் உரையில், டெல்டா விவசாயிகள் பிரச்னையை போக்கும் வகையில், முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜன-201322:36:48 IST Report Abuse
Pugazh V கொடி ஏற்ற முதல்வர் வர வேண்டியது ப்ரொடொகால் படி மஸ்ட். அதனால் தான் கொடநாட்டு சுக வாசம் நிறுத்தி முதல்வர் வருகிறார். நல்ல காலம் எனது தலைமயிலான அரசில் எனக்கு பதில் சசி கொடி ஏற்றுவார் என்று அறிவிக்காமல் விட்டாரே. கவர்னர் உரையினை சில ஐ ஏ எஸ் அதிகாரிகள் தயாரித்து கொட நாடு அனுப்பி, அதில் திருத்தங்கள் செய்து, கவர்னருக்கு அனுப்பப்படும். அவருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அதை வாசித்தே தீர வேண்டும். கலைஞரின் ஆலோசனைப் படி இயங்கும் மத்திய அரசு. ஆஹா, கேட்கவே இனிமை. இன்னொரு முறை சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
19-ஜன-201316:20:50 IST Report Abuse
Thangaraj தமிழ் நாடு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை எல்லாம் வட்டி உடன் தள்ளு படி செய்தால் நல்லா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
19-ஜன-201312:14:15 IST Report Abuse
krishna amma ஆட்சியில் பல அவலங்கள். அதில் இதுவும் ஒன்று.
Rate this:
Share this comment
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
19-ஜன-201311:15:11 IST Report Abuse
aymaa midas=vison2023 கவர்னர் உரையால் விவசாயிக்கு பலன் இருக்கோ இல்லையோ அடிமை குழுவுக்கு கண்டிப்பாக பலன் உண்டு. சேகரன் கேட்டுக்கொண்டால் டீ கடைக்காரர் ஒரு ஒட்டக பால் டீ மற்றும் ஒரு ரூபா விலையில் ரெண்டு இட்டிலியும் பிச்சி போடுவார் சப்பு கொட்டி சாப்பிட்டு போ.......................................,
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19-ஜன-201311:04:13 IST Report Abuse
சு கனகராஜ் விரைவில் உரிய நிவாரண தொகையை அறிவித்து ஏழை விவசாயிகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201315:16:09 IST Report Abuse
தமிழ்வேல் 10 நாள்ல வந்துடும்.......
Rate this:
Share this comment
Cancel
அந்நியன் - வயல் வெளிகள்,இந்தியா
19-ஜன-201310:39:05 IST Report Abuse
அந்நியன் நம்ம வீரம் எல்லாம் கருத்து சொல்றதிலே மட்டும் தானே. களத்தில இல்லையே. அப்புறம் அவங்கள சொல்லி எந்த குறையும் இல்லை.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201315:15:42 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை - அதுக்குதானே அவர்களுக்கு சம்பளம் (கிம்பளம்) அதோட எல்லா வசதியும் செஞ்சு தர்றோம் ? நாம இலவசமா கத்திபுட்டு படுத்துக்க வேண்டியதுதான்.......
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-ஜன-201309:38:57 IST Report Abuse
villupuram jeevithan கருணா ஆட்சியில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டு, நெல்லை யாரும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கெடுபிடி இருந்தது. போலீசார் கிராமங்களுக்கு சென்று நெல் இருக்கும் பானைகளை எல்லாம் உடைத்தது எல்லாம் இன்னமும் ஞாபகம் இருக்கு. அம்மாதிரி நிலைமை வராமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201315:13:44 IST Report Abuse
தமிழ்வேல் அந்த நிலைமை வர்றதுக்கு சான்ஸ் இல்லை...நெல்லு இருந்தாதானே சேமிக்க ? நெல்லுதான் வேற மாநிலத்திலேருந்து (அரிசியாவும்) வருதே ?...
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
19-ஜன-201309:29:03 IST Report Abuse
Guru விவசாயிகளின் வயலும் வயிறும் காய்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒன்பது வருடங்களாக ‘தேமே’ என்று ஒருவர் இருக்கிறார் அவர்தான் பிரதமர்.... கர்நாடகத்தில் ஒரு பிரச்னை என்றால், கர்நாடகாவில் எல்லா கட்சியினரும் சேர்ந்து கும்மியடிக்கிறார்கள். இங்கு ஆளும்கட்சி மட்டும் தனியே போராட வேண்டும் (அது ADMK வோ DMK வோ )... எதிர் கட்சிகள் அதில் பங்கு கொள்ளாது .. (அது ADMK வோ DMK வோ )
Rate this:
Share this comment
Cancel
udanpirappu3 - chennai ,இந்தியா
19-ஜன-201307:50:30 IST Report Abuse
udanpirappu3 எவனும் சாப்புடாம இருக்கவும் வேணாம் ,யாருக்கும் பரிதாபப்படவும் வேணாம், ஒழுங்கா தண்ணிய வாங்கிக் கொடுத்தா விவசாயிகள் நாட்டை காப்பாற்றுவார்கள். பேசாம கவர்னரை கொடநாட்டுக்கு போய் பட்ஜெட்டை தாக்கல் செய்யச்சொல்லுங்க, அப்புறம் அதுக்கும் மத்திய அரசும்,கலைஞரும் காரணம் என சொல்லுவார் ????? உடனே இங்க ஜிங் ஜா சத்தம் அதிகரிக்கும் ,இதெல்லாம் தேவையா ???
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19-ஜன-201306:12:15 IST Report Abuse
Samy Chinnathambi அதுதான் மிடாஸ் மம்மி முக்கு சந்து எல்லாம் ஒன்னு விடாம டாஸ்மாக் தொறந்து வச்சு இருக்காங்களே.. அதுதான் தமிழ்நாட்டில் உள்ள எல்லாருக்கும் நிவாரணம்....துன்பம் வந்தா எல்லாரும் ஒரு கட்டிங் வாங்கி சாத்திகிட்டு படுக்க வேண்டியது தான். எதிர்த்து எல்லாம் யாரும் கேள்வி கேட்டு புடாதீங்க...அப்புறம் ஏதாவது ஒரு சட்டத்துல உங்கள... ......அப்புறம் நான் பொறுப்பு கிடையாது சொல்லிபுட்டேன்...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201315:10:24 IST Report Abuse
தமிழ்வேல் பக்கத்திலேயே இட்லிக்கடையும் வரப்போவுது சாமி... (இட்லி மட்டுமா விப்பாங்க ?)...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை