டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யணும் ! கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, தன் கூட்டணியில் உள்ள, மத்திய அரசை, இதமாக வலியுறுத்தியுள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மானிய விலை சிலிண்டர்களை, ஆண்டுக்கு, 12 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என, பதமாக, ‌வேண்டு‌கோளும் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை ; சிறிய அளவில், டீசல் விலையை உயர்த்தும் அனுமதியைக் கூட, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிப்பது தவறான முடிவு. டீசல் விலை உயர்த்தப்பட்டால், அது வேறு சில பொருள்களின் விலை உயர்வுக்கும் வழி வகுக்கும். மத்திய அரசு, டீசல் விலை உயர்வு பிரச்னையில், மீண்டும் பரிசீலனை செய்து, ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மானிய விலை, சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, 9 ஆக உயர்த்தியுள்ளது. பார்லிமென்ட் நிலைக்குழு அந்த எண்ணிக்கையை, ஆண்டுக்கு, 12 ஆக, உயர்த்த வேண்டுமென, பரிந்துரை செய்திருந்தது. சமையல் காஸ் சிலிண்டர் விநி‌யோகத்தில், நிதிச்சுமை ஏற்பட்ட போதிலும், அதை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு, அடித்தட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, மாதம் ஒரு சிலிண்டர் வீதம், மானிய விலை சிலிண்டர்களை வழங்கியே தீர வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


அறிக்கையில் குழப்பம் :

மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து விட்டு, "நான் கண்டிக்கவில்லை' எனக் கூறுவது தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வாடிக்கையாகிவிட்டது.


சமீபத்தில், ரயில் கட்டண உயர்வுக்கு முதலில் கண்டனம் தெரிவித்து விட்டு, பின், "நான் கண்டனம் தெரிவிக்கவில்லை' என்றார். இந்நிலையில், டீசல் விலை உயர்வு குறித்து, நேற்று கருணாநிதி, ஒரு அறிக்கை விடுத்தார்.அந்த அறிக்கையின் தலைப்பில், "டீசல் விலை உயர்வுக்கு கலைஞர் கண்டனம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அறிக்கையில், "மத்திய அரசு டீசல் விலை உயர்வு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளார். அவரது அறிக்கையில், எந்த இடத்திலும், மத்திய அரசுக்கு கண்டனம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (122)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.k.natarajan - chennai,இந்தியா
19-ஜன-201322:33:33 IST Report Abuse
g.k.natarajan திரு. அழகிரி அவர்கள் கேபினெட் ,கூட்டதிற்கு சென்று இதை எதிர்த்தாரா? மக்களுக்கு அறிவிக்கவும்?திரு.பாலு அவர்களை சேர்த்திருந்தால் எதிர்பாவது தெரிவித்திருப்பார் ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜன-201322:05:35 IST Report Abuse
Pugazh V கலைஞர் எனும் ஒரு மனிதரின் குடும்பம் பற்றி விமரிசிப்பது அநாகரீகமாக இங்கே யாருக்கும் உறைக்கவில்லையா? மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தாலும் , பேசாமல் இருந்தாலும் அவரை வசை பாட வேண்டும் என்கிற எண்ணத்துடன் மட்டுமே கருத்து எழுதி படித்து சந்தோஷப் படுங்கள். பத்தே நாளில் 200 கோடிகள் வரை சில திரைப்படங்கள் வசூல் சாதனை புரியும் அளவிற்கு மக்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. வெறும் 50 பைசா உயர்விற்கு பெரிதாக பேச வந்து விட்டார்கள். ஒரே நாளில் 5 கோடிக்கு குடிக்கிறார்கள் நெல்லை மக்கள் மட்டுமே, அப்போ மொத்தத்த அதமிழக மக்கள் எத்தனை கோடிகளுக்கு குடித்திருப்பார்கள்? இதற்கும் கலைஞர் ஆரம்பித்து வைத்தார் என்பார்கள். தனி மனித விமர்சனம் ஒரு சாபம் இந்த வலைப் பூவில். சகித்துக் கொள்ளத் தான் வேண்டும். இந்த அவிலை உயர்வில் மாநில அரசின் கூடுதல் வருமானமான 22% வேண்டாம் என்று எந்த மாநில அரசாவது சொல்லுமா? அல்லது அடுத்து மத்திய அரசாகப் போகும் கட்சி, டீசல் விலையைக் குறைப்போம் என்று சொல்ல இயலுமா?
Rate this:
Share this comment
Cancel
I Love India - Bangalore,இந்தியா
19-ஜன-201321:45:57 IST Report Abuse
I Love India மின், பேருந்து, பால் விலை ஏற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு பின் ஏற்றப்பட்டது?? இது போக்கு வரத்து, மின் வாரியம், ஆவின் துறைகளை காப்பாற்ற ஏற்ற பட்டவை ஆகும், விலை ஏற்றி ஒரு வருடம் மேல் ஆகிறது, இன்றும் விலை ஏற்ற முடிவை தமிழக அரசு தான் எடுக்கும். ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீஸல் மற்றும் காஸ் விலையை ஏற்ற முடிவை எண்ணை நிறுவனங்களுக்கு(குறிப்பிட்ட முதலாளிகள், முதலிட்டாளர்கள் உடையது ) கொடுத்து எப்படி சரியாகும். எத்தனை தடவை விலை ஏற்றப்பட்டது? மானியத்தை நிறுத்துவது நல்ல முடிவு.. அதற்கு முன் கருப்பு பணத்தை, லஞ்சத்தை எப்படி நிறுத்த போகிறார்கள். அகவே மாநிலத்தின் விலை ஏற்றம் மற்றும் மத்திய அரசின் விலை ஏற்றத்தையும் ஒப்பிடவே கூடாது. மத்திய அரசு மக்களுக்காக அரசாங்கத்தை நடத்தவில்லை, பெரும் முதலாளிகளுக்கு நடத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
Rishi Jae - kualalumpure,மலேஷியா
19-ஜன-201321:14:16 IST Report Abuse
Rishi Jae அப்பொழுது எண்ணெய்,எரிவாயு ,காஸ் விலையை ஏற்றாமல் ஒரே முறை அதிகபச்ச விலையாக ஆயிரம் ரூபாயாக ஏற்ற அய்யா தமிழர் அல்லாத தமிழ் சேவகர் கலைஞர் பரிந்துரை செய்யலாமே .................
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
19-ஜன-201320:22:03 IST Report Abuse
Thangaraj 1. எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன். 2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை , 2.1 டீசல் விலை உயர்க்காக மத்திய அரசுக்கு கடுமையான கண்டனம், ஆனால் நாள் முந்தா நாள் நடை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விலை உயர்க்க்கு ஆதரவாக பேச சொல்லி கட்சி அமைச்சர்களுக்கு உத்தரு கொடுத்து விடுவேன் . 3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது . 4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் . 5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் . 6. வெரும் 10 கோடியில் ஆரம்பித்த கலைஞர் டிவிக்கு பல வட இந்திய நிறுவனங்களிடமிருந்து (ச்பெக்ட்ரும் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த) 214 கோடி வாங்கி இருப்பார், ஆனால் இதை CBI கண்டு பிடித்து கேட்டால் கடன் வாங்கினேன் என்பேன் இரண்டே நாளில் திருப்பியும் கொடுத்து விடுவேன். 7. கண்ணகிக்கு சிலை எழுப்புவேன், ஆனால் தெருவிற்கு ஒரு ......என வைத்துகொள்வேன். 10. டெசோ ஈழத்திற்கு போராடும் , ஆனால் தனி ஈழ தீர்மானங்கள் இருக்காது. 11. இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுடுவதை வன்மையாக கண்டிப்பேன் ஆனால் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு காரணமான் கட்ச தீவை இந்திரா இலங்கையிடம் கொடுக்கும் போது முதலில் தஆட்‌சேபித்தேன் பின்னர் சர்காரிய கமிசன் ஊழல் வழக்குகள் தூசு தட்டபடும் என சொன்ன உடன் சம்மதித்து விட்டேன். 12. தமிழ் தமிழ் என கத்துவேன். ஆனால் தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழ் நாட்டில் அரசு விடுமுரையை அரிவித்து விடுவேன். 11. ஊழலுக்கு நான் நெருப்பு என்பேன். ஆனால் என் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரின் சொத்துகளையும் கூட்டினால் உலக முதல் பணக்காரன் சார்லசின் 69 பில்லியன் USD யை தாண்டி விடும். 12. தமிழ் மக்கள் இந்தி படிக்க கூடாது என்பேன். ஆனால் பேரன் தயாநிதிக்கு இந்தி நல்லா தெரியும் என கூறி மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பேன் 13. அன்பழகனை கட்சில் இரண்டால் இடத்தில வைத்துள்ளேன் என்பேன் ஆனால் துணை முதல்வர் பதவியை மகன் சுடாலினுக்கு தான் கொடுப்பேன். 14. தமிழ் மக்கள் கடுமையான மின் வெட்டினால் பாதிக்கவடுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்பேன். ஆனால் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தமிழ் நாட்டிக்கு ஒதுக்க கூடாது என கண்டிப்பாக மத்திய அரசிடம் திரை மறைவில் சொல்லி விடுவேன். 15. வால் மார்ட் தமிழகத்தில் வந்தால் கடும் போராட்டம் நடத்துவேன் என்பேன். ஆனால் ஒட்டேடுபின் போது FDI இக்கு ஆதரவாக ஓட்டை போட்டு விடுவேன். 16. போர் நின்றுவிட்டது என்று பிரணாப் தான் தவறான செய்தியைக் கொடுத்தார் என்பேன், ஆனால் அவர் ஜனாதிபதி ஆவதற்கு நான் முதல் ஆளாக முன்மொழிவேன் . 17. தமிழர்கள் டெல்ஹியில் உயர் பதவியில் வருவதை தான் நான் எப்போதும் விரும்புவேன் என்பேன். ஆனால் டாக்டர் அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக வர இருந்த நிலையில் அவருக்கு ஆதரவு இல்லை என்பேன். 18. "அரசியல் சட்டத்தைக் கொளுத்துவோம்" - ன்னு வீராப்பு பேசுவேன். அதே மாதிரி கொளுத்தி கைதாகி தண்டனை கடுமையாக இருக்கும்,,,, சிறை செல்ல வேண்டி என்று தெரிந்த நிலையில் "வெறும் காகிதத்தைத்தான் கொளுத்தி" என்று காமெடி செஞ்சிட்டு வெளியே வந்து விடுவேன். 17. BJP யை மத வாத கட்சி என்பேன். ஆனால் முஸ்லீம் லீக் உடன் கூட்டணி வைத்து கொள்வேன். 18. ராஜபக்சேவை எதிர்ப்பேன் , ஆனால் போராட்டமில்லை . 19. தேசிய பேரிடர் நிதியிலிருந்து இதுவரை, ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக வழங்கப்பட்டிருக்கிறது என தெரிந்த பின்னரும் 40 ஆயிரம் ரூபாய் வேணும் என கேட்பே ன் , விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பாமல் 15 பைசா போஸ்ட் கார்டு தான் அனுப்புவேன். இதனால் தான் என்னை அந்தர் பல்டி தாத்தா / தமிழக கருணா என்று மக்கள் அழைக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-201320:53:03 IST Report Abuse
Baskaran Kasimaniஅருமை......
Rate this:
Share this comment
AK47 - Chennai,இந்தியா
19-ஜன-201321:52:48 IST Report Abuse
AK47அருமை அருமை மிக மிக அருமை. சூப்பர்....
Rate this:
Share this comment
Thangaraj - ,இந்தியா
20-ஜன-201304:58:23 IST Report Abuse
Thangarajஅனைத்துக்கும் காரணம் மத்திய ரயில்வே துறை செய்த இரண்டு தவறுகள் தான் என்கிறது ஒரு தரப்பு ..... 1. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் திருவாரூரில் இருந்து டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகளை பிடித்து திருப்பி அனுபாமல் விட்டது, 2. கல்லக்குடி ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தபோது சரியான நேரத்தில் ஒரு எக்ஸ்பிஸ் ரயிலை இயக்காதது....
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
19-ஜன-201319:11:32 IST Report Abuse
Raju Rangaraj அல்போன்சுக்கு உண்மை நிலை புரிந்ததால் வெட்டியாக கருணாவுக்கு சப்போர்ட் செய்து தன்மானத்தை இழக்க விரும்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இனி அவர் திருந்தும் காட்சியை நாம் காணலாம். இவர் இனி மாறன் குடும்ப நலம் கருதி கடிதங்கள் எழுதி புலமையை மேம்படுத்தலாம். அண்ணா இனி இவர் கனவில் வரலாம். பெரியார் இனி மானசீகமாக உரையாடலாம். என்ன வாய்ப்பு பலே பாண்டியா
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
19-ஜன-201318:58:10 IST Report Abuse
பொன்மலை ராஜா குடும்பத் தலைவரே, சாயங்காலமானா மெரினா பக்கம் வாங்க ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துட்டு "டீசல் இனி இலவசம்" அறிக்கை விட்டுட்டு வரலாம் அப்படியே வேட்டி கட்டிய தமிழனுக்கு ஒரு போனை போட்டு "ஒரு பவுனுக்கு ஒரு லிட்டர் டீசல்"னு விலையை ஏத்த சொல்லிடலாம்
Rate this:
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
19-ஜன-201318:46:31 IST Report Abuse
Tamilarasu Rajakkili சில புத்திசாலிகளும்... பல மதி இழந்தவர்களும்... அதற்கும் மேலாக அடிவருடிகள்... கூடுதலாகவே இருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
19-ஜன-201316:15:02 IST Report Abuse
Thangaraj சப்பை கட்டு மன்னன் மரியா அல்போன்ஸ் அவர்களை இன்னும் காண வில்லை, பொங்கல் லீஉ தான் முடிஞ்சாச்ச...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19-ஜன-201320:54:20 IST Report Abuse
சு கனகராஜ் ஒரு வேளை பயந்துட்டாரோ ?...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-201315:44:30 IST Report Abuse
Baskaran Kasimani பல்டி மன்னா நீ வாழ்க நீடூழி...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19-ஜன-201321:04:54 IST Report Abuse
சு கனகராஜ் மறு பரிசெலனை செய்து அதிகமாக கூட்ட சொல்கிறாரோ ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்