சென்னை: பல்மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடங்க, லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் தலைவர், டாக்டர் குணசீலனை, சி.பி.ஐ., நேற்று அதிரடியாக கைது செய்தது. சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட குணசீலன், சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு பல்மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி கேட்டு, டில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதன் பேரில், இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு கமிட்டி, கடந்த ஆண்டு, அக்டோபர், 5ம் தேதி ஆய்வு செய்தது. அப்போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதை நிவர்த்தி செய்யும் படி, கல்லூரி நிர்வாகத்துக்கு, ஆய்வு கமிட்டி உத்தரவிட்டது.
இதற்கிடையே, முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி பெறுவதற்காக, இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினரான, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முருகேசனுக்கு, ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகம், 1 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப் போவதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இம்மாதம், 7ம் தேதி, டாக்டர் முருகேசன் வீட்டை, சி.பி.ஐ., அதிகாரிகள், மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது, ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள், எம்.எல்.ஏ., பழனி ஆகியோர், 25 லட்ச ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, அனைவரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தினர்.
பின், சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமபத்திரனிடம் நடந்த விசாரணையில், ஆதிபராசக்தி கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடங்குவதற்கு, பல் மருத்துவ கவுன்சிலில் பொறுப்பு வகிப்பவர்கள் அனைவருக்கும், லஞ்சம் கொடுக்க முடிவு செய்ததாகவும், டாக்டர் முருகேசனுக்கு முதல் தவணையாக, 25 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு பல்மருத்துவ கவுன்சில் தலைவரும், இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான, டாக்டர் குணசீலன் உட்பட, பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. டாக்டர் குணசீலனின் தந்தை வி.பி.ராஜன், மருத்துவ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அடையாறு காந்தி நகரில் உள்ள டாக்டர் குணசீலன் வீட்டிலும், அவருக்கு சொந்தமான அறக்கட்டளை அலுவலகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள், இம்மாதம், 13ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நுங்கம்பாக்கதில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று ஆஜராக, டாக்டர் குணசீலனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு சி.பி.ஐ., அலுவலகத்துக்கு, டாக்டர் குணசீலன் வந்தார். காலை, 10:00 மணிக்கு தொடங்கிய விசாரணை, மாலை, 5:00 மணி வரை நீடித்தது.இந்த விசாரணையில், லஞ்ச விவகாரத்தில், குணசீலனுக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இருந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர் தரப்பில் பறிமுதல் செ ய் யப்பட்ட, 75 லட்ச ரூபாய் பணத்தையும், சி.பி.ஐ., தாக்கல் செ ய் தது. அவரை, பிப்., 1ம்தேதி வரை, கோர்ட் காவலில் வைக்க, நீதிபதி யூசூ ப் அலி உத்தரவிட்டார். சிறையில் முதல் வகுப்பு வச தி அளிக்கக் கோரி, குணசீலன் தாக்கல் செ ய் த மனுவை ஏற்றுக் கொண்டு, அவருக்கு முதல் வகுப்பு வச தியளிக்க உத்தரவிட்டார். குணசீலன் தாக்கல் செ ய் த ஜாமின் மனு மீதான விசாரணையை, அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.இதற்கிடையில், இதே வழக்கில் கைது செ ய் யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் முருகேச ன் உள்ளிட்ட நால்வரின் ஜாமின் மனு நேற்று விச õரணைக்கு வந்தது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தலைமறைவாக இருப்பதாலும், ஜாமின் மனுவை தள்ளுபடி செ ய் து நீதிபதி உத்தரவிட்டார்.
வசூல் குறித்து விசாரணை :
தமிழ்நாட்டில் ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி, 15க்கும் மேற்பட்ட தனியார் பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. எனவே, அரசு கல்லூரி தவிர்த்து, இதர கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, லஞ்சப்பணம் பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. டாக்டர் குணசீலன், இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் நீண்ட காலம் உறுப்பினராக இருப்பதால், அண்டை மாநிலங்களில், உள்ள பல் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களிடம் பணம் பெற்றுள்ளரா எனவும் விசாரணை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏன் இந்த பொழப்பு. ...லஞ்சம் வாங்காமால் குடும்பம் நடத்த முடியாதா? .....லஞ்சம் வாங்கி பணக்காரர் ஆகி சமுதாயத்தில் பெரும் புகழோடு வாழனுமா ?..அரசியலில் சேர்ந்திருங்க....அதவும் நம்ம தீ நா மோனா கானா கட்சி ...லஞ்சம் கொடுத்தே கட்சியில் சேர்க்க ஆள் தேடிகிடிருகாங்க.....நீங்க வாங்க வேணாம்...அவங்க கொடுப்பாங்க....வாழ்க மக்கள் ஆட்சி

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.