At 'Chintan Shivir', Sonia Gandhi asks young Congressmen to be austere | ஒற்றுமையா இருங்க! சோனியா வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒற்றுமையா இருங்க! சோனியா வேண்டுகோள்

Updated : ஜன 20, 2013 | Added : ஜன 19, 2013 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஒற்றுமையா இருங்க! சோனியா வேண்டுகோள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜெய்ப்பூர் நகரில் நேற்று துவங்கிய காங்கிரஸ் கட்சியின், "சிந்தன் ஷிவிர்' என, அழைக்கப்படும், சிந்தனை கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் தலைவர் சோனியா, "கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெட்க கேடானவை' என கூறினார். பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு, இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மே மாதம், நடப்பு, 15வது லோக்சபாவின் பதவி காலம் முடிகிறது. தேர்தலை சந்திக்க இன்னும், 16 மாதங்களே உள்ள நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று, காங்கிரஸ் கட்சி, முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
"சிந்தன் ஷிவிர்' நிகழ்ச்சியில் உற்சாகம் :


"சிந்தன் ஷிவிர்' என்ற பெயரிலான, இரண்டு நாள் சிந்தனை கூட்டம் மற்றும் அதை தொடர்ந்து, ஞாயிற்று கிழமை, அகில இந்திய காங்கிரஸ் மாநாடும் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், பிரதமர், மன்மோகன் சிங், காங்கிரஸ் பொது செயலர், ராகுல் உட்பட, 347 பேர் பங்கேற்றுள்ளனர். ஜெய்ப்பூரின், பிர்லா ஆடிட்டோரியத்தில், "சிந்தன் ஷிவிர்' கூட்டத்தை துவக்கி, கட்சி தலைவர் சோனியா பேசியதாவது: வரும், 2014 லோக்சபா தேர்தலுக்கு, கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும். மக்கள், நம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒற்றுமையாக செயல்பட முடியாததால் தான், சில நேரங்களில் தோல்வியை சந்தித்துள்ளோம் என்பதை மறக்காதீர். எனவே, தங்களின் தனிப்பட்ட குறிக்கோளை மறந்து, கர்வத்தை கைவிட்டு, ஒற்றுமையாகவும், ஒரு மனதுடனும், கட்சி முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். கட்சியின் வெற்றி என்பது, நம் ஒவ்வொருவரின் வெற்றியில் தான் அமைந்திருக்கிறது என்பதை மறக்காதீர்."கவனமான முடிவெடுப்போம்' :


தேர்தல் கூட்டணி விஷயத்தில், அனைத்து அம்சங்களும் சீர்தூக்கி பார்க்கப்பட்டு, கவனமான முடிவே எடுக்கப்படும்; கட்சிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதில், மாற்று கருத்துக்கே இடமில்லை. எனினும், நம் பலம் என்ன; பலவீனம் என்ன என்பதை கட்சியினர் உள்நோக்கி பார்க்க வேண்டும். காங்கிரஸ் மட்டும் தான், நாட்டின் கிராம பஞ்சாயத்து முதல், நகரங்கள் வரை பரவியிருக்கும், பெரிய கட்சி. கடந்த, ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி காட்டியுள்ளோம்; மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளோம்.


எனினும், ஊழலால் பொதுமக்கள் மிகுந்த மனச்சோர்வு அடைந்துள்ளனர். படித்த நடுத்தர மக்கள் அரசியலுக்கு அதிக எண்ணிக்கையில் வர வேண்டும். நாடு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, கட்சியினர் தீர ஆலோசிக்க வேண்டும்.
"அடக்கி வாசிங்க' :


ஆடம்பர விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்; அத்தகைய செயல்களால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், நாட்டிற்கே அவமானமானது. மனதுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும் பாலியல் கொடூர சம்பவங்கள், விதவைகள் அவமதிப்பு, பெண் சிசு கொலை, கருக்கொலை என, பலவும் நடக்கிறது. இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நாமும், நம்மால் ஆன வழிகளில், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அம்சங்களை விவாதிக்க வேண்டும்.இவ்வாறு, சோனியா பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
19-ஜன-201319:52:11 IST Report Abuse
Seshadri Krishnan மீண்டும் இந்த சோனியா பேக் சீட் டிரைவர் ஆகிவிட்டால் பூட்டான் கூட இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும். தேவை இக்கணம் தேசபக்தி.
Rate this:
Share this comment
Cancel
Sriram C.B. - chennai,இந்தியா
19-ஜன-201316:27:50 IST Report Abuse
Sriram C.B. கோஷ்டிகள் பலவாக இருந்தாலும், கொள்ளை அடிக்கவும், பங்கு போடவும் எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்பார்கள். கவலை வேண்டாம். இந்திய சுதந்திரத்தினை ஒற்றுமையாக இருந்து அன்னியர்களிடமிருந்து வாங்கியவர்கள், ஒரு அன்னிய இத்தாலிய பெண்மணி அட்வைஸ் செய்யும் அளவிற்கு காங்கிரஸ்காரர்கள் தரம் குறைந்து விட்டார்கள். வெட்கப்படவேண்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Raju Ramasamy - Tirupur,இந்தியா
19-ஜன-201316:01:13 IST Report Abuse
Raju Ramasamy அண்ட புளுகு ஆகாச புளுகு என்பது இது தானோ. சபாஷ். எதிர்கால இந்தியா எப்படி இருக்குமோ, ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்
Rate this:
Share this comment
Cancel
singaravelu - thiruvarur ,இந்தியா
19-ஜன-201315:43:53 IST Report Abuse
singaravelu 9 ஆண்டுகால இந்தியாவின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழலுக்கு எதிரான பல சட்டங்களை ஜனநாயகத்திற்குக் கொஞ்சமும் மாசு ஏற்பட்டு விடாமல் உருவாக்கிக் கொண்டுவந்து மக்கள் கரத்தில் ஒப்படைத்திருந்தாலும் ஊடகங்களின் முழுமூச்சான எதிர்ப்பு காங்கிரசின் மீதே புதைந்து கிடப்பதன் மர்மம் புரியவில்லை..பொருளாதாரப் பெருமேதை மன்மோகன்சிங்கை விட, வேறு யாரால் இந்த நாட்டை ஒருங்கிணைத்துக் கொண்டுசெல்ல முடியும்? அனைவருக்கும் கிழியாத ஆடை, ஒழுகாத வீடு, அழுகாத உணவு என்பது காங்கிரசின் அடிப்படைக் கொள்கை...காந்தி, நேரு, காமராஜ், இந்திரா, கண்ட சமதர்மக் கொள்கைகளை நிறைவேற்றி முடித்து விட்டபின் நமக்கு ஏது இங்கு வேலை..? எடுத்துச் சொல்லுவோம் ....ஏற்பதோ...எறிவதோமக்கள் வேலை...ஆனால் சொல்லாமல் இருந்துவிட்டால் வருந்திப் பயன் இல்லை...நாடே 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் ....என்ன செய்ய...?
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
19-ஜன-201313:07:05 IST Report Abuse
Rajasekaran Palaniswamy அப்போ இவரே ஒத்துக்கொள்கின்றார் காங்கிரெஸ்காரர்கள் ஒற்றுமையாய் இல்லையென்று. பாவம்.
Rate this:
Share this comment
Cancel
nakarajan,k - sivakasi,இந்தியா
19-ஜன-201311:39:48 IST Report Abuse
nakarajan,k முஸ்லிம் வோட்டு தேவை படும்போது பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்
Rate this:
Share this comment
Cancel
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
19-ஜன-201311:21:52 IST Report Abuse
K.SURIYANARAYANAN வெற்றிகரமாக முன்றாம் முறையாக ஊழல் பண்ண ஒற்றுமை மிகவும் அவசியம். என்று சோனியா இத்தாலி தலைவி கருத்து தெரிவித்துள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
19-ஜன-201310:59:39 IST Report Abuse
Raja Singh வாங்க மேடம் வாங்க, தமிழ்நாட்டுக்கு வரும்போது இத்தாலி தயாரிப்பு இட்லி கொண்டு வாங்க. குஷ்பு இட்லி சாப்பிட்டு சோம்பேறிகளாய் இருக்கும் தி .மு. க. கூட்டணி காங்கிரசு தமிழ் பல பிரிவுகளுக்கு இட்லியால் ஒட்டி ஒத்தடம் கொடுத்து ஒன்றுபடுத்துங்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
19-ஜன-201310:41:17 IST Report Abuse
Hari ஆடம்பர விழாக்களால் பணம் எங்கேருந்து வந்தது என்கேருந்து வந்தது என்ற கேள்வி எழும். பணத்தை பூட்டி வைக்கவும்
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
19-ஜன-201310:41:02 IST Report Abuse
Yoga Kannan மதிப்பிற்குரிய சோனியாஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். .. இன்றைய தமிழக நிலையை எடுத்து கூறுகின்ற நிலையை எந்த ஒரு காங்கிரஸ் காரரரும் முன்வரவில்லை... தங்கள் கூட்டனியல் அங்கம் வகிப்பவர்களும் அதை சிந்திக்கவும் இல்லை. என்னுடைய விண்ணப்பம்....இந்தியாவை ஆளுகின்ற கட்சியின் தலைவராக ....ஆட்சியை வழி நடத்துபவராக இருகின்றீகள் ....தமிழகத்தில் தற்சமயம் நிலவும் நிலைமைகளை அறிந்தீர்பீர்கள் என்று நினைக்கின்றேன்....மாநில அரசு செய்ய தவறுகின்ற போது.... மைய அரசு தன கடைமையை செய்ய வேண்டும் .... அந்த தார்மீக பொறுப்பு தாங்களுக்கும் உண்டு என்பதை இந்த சிறு மடல் மூலம் விளக்கி உள்ளேன் .....
Rate this:
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
19-ஜன-201318:27:07 IST Report Abuse
dori dori domakku doriஎன்னாதுக்கு வள வள நு , முதல்ல கரண்ட் வுட சொல்லுப்பா , மாநில அரசு தவறு , மைய அரசு கடமை நு , - உளுந்து அறைகிற...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை