சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டவரின், ஜாமின் மனு மீதான விசாரணையை, இம்மாதம், 21ம் தேதிக்கு, சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. கலப்பு திருமண விவகாரத்தில், தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்தில், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் சூறையாடப்பட்டன; தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, தர்மபுரி மாவட்டம், கோணங்கிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த, அருள்நாதன் என்பவரும், கைது செய்யப்பட்டார். ஐகோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனு: மின் வாரியத்தில், அக்கவுன்ட் அதிகாரியாக பணியாற்றுகிறேன். தர்மபுரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரை கைது செய்தனர். குறிப்பிட்ட அந்த இரண்டு சமூகத்தையும், நான் சார்ந்தவன் அல்ல. சம்பவ இடத்தில் இருந்து, வெகு தொலைவில், நான் வசிக்கிறேன்.
கடந்த ஆண்டு, நவம்பர், 8ம் தேதி முதல், சிறையில் உள்ளேன். முதல் தகவல் அறிக்கையில், என் பெயர் இல்லை. கோர்ட் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன். எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் அடங்கிய "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. விசாரணை, இம்மாதம், 21ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.