மதுரை: மதுரையில், பாதிரியார் மீது, பெண் கூறிய பாலியல் புகார் குறித்து, வழக்குப்பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டது. மதுரை சம்பட்டிபுரத்தை சேர்ந்த மேத்தலின் நேசக்குமாரி, 43. திருமணமாகாத இவர், மதுரை, முகவை திருமண்டல திருச்சபையில் வேலை பார்த்தார். இவர், மதுரை இறையியல் கல்லூரி போதகர் பாதிரியார் ஜோசப், 55, மீது பாலியல் புகார் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். பாதிரியார் ஜோசப் மீது, ஜன.,24 ம்தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, புதூர் இன்ஸ்பெக்டருக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பாதிரியார் ஜோசப் கூறுகையில், ""பிறர் தூண்டுதல் பேரில், அப்பெண் பொய் புகார் கூறியுள்ளார்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.