சென்னை: "அதிகாரிகள், பெரிய எஜமானர்கள் போல், நடந்து கொள்கின்றனர். அவர்களின் மெத்தன நடவடிக்கையால், கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் ஆவது அதிகரிக்கிறது' என, சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது.கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி; துப்புரவு தொழிலாளி. ஊதிய உயர்வு, பணி வரன்முறை தொடர்பாக, பழனிச்சாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கில், ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.
"இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை' என, கோர்ட் அவமதிப்பு வழக்கை, பழனிச்சாமி தாக்கல் செய்தார். மனுவில், நகராட்சி நிர்வாகத் துறை செயலராக இருந்த, ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளை சேர்த்திருந்தார். தற்போது, தலைமைச் செயலராக, ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளார். இவ்வழக்கில் ஆஜராகுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. கடந்த வாரம், இவ்வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் ஆஜராக ஆஜராகவில்லை.
இதையடுத்து, விசாரணையை, இம்மாதம், 18ம் தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்து, அன்று ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். இவ்வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ""ஐகோர்ட் உத்தரவு அமல்படுத்தப்பட்டு விட்டது. பணிச் சுமை காரணமாக, தலைமைச் செயலர் ஆஜராக முடியவில்லை; கோர்ட்டில் ஆஜராக, விலக்கு அளிக்க வேண்டும். நீங்கள் பிறப்பிக்கும் உத்தரவில், எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், ""1998ம் ஆண்டுகளில், ஐகோர்ட்டில், 108, கோர்ட் அவமதிப்பு வழக்குகள் இருந்தன; தற்போது, ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணம்; பெரிய எஜமானர்கள் போல், நடந்து கொள்கின்றனர். இவர்களின் அலட்சியத்தால், அரசு வழக்கறிஞர்கள், பலிகடாவாக ஆகின்றனர். அவர்களை, கோர்ட்டுக்கு வரவழைப்பது தான், சரியானதாக இருக்கும்,'' என்றார். இவ்வழக்கில், விரிவான உத்தரவை பின்னர் பிறப்பிப்பதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாத ஊதியம் பெரும் அரசு அதிகாரியாக இருந்தாலும் நீதிபதிகளாக இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இரு தரப்பு பல முறை நிரூபித்து இருக்கிறார்கள். என்னுடைய மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2012 ஒரு நாள் மட்டும் கேஸ் லிஸ்டில் காண்பித்து தீர்ப்பு ஒத்தி வைத்து இருக்கிறார் ஒரு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பு எழுதுகிறார் எழுதுகிறார் எழுதி கொண்டே ரிட்டயர் ஆகி விடுவார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.