SC court news | தமிழக அரசு மனு வரும் 28ம் தேதி விசாரணை | Dinamalar

தமிழக அரசு மனு வரும் 28ம் தேதி விசாரணை

Added : ஜன 19, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: "தமிழகத்தில் காவிரி பாசன பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களில் ஒரு பகுதியை காப்பாற்ற, கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக, 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் வரும், 28ம் தேதி விசாரிக்கிறது.காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம், கடந்த, 10ம் தேதி டில்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி, எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. "கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு, குடிநீர் தேவைகளுக்கே போதுமானதாக இருப்பதால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்படி உத்தரவிட முடியாது' என்றும் கண்காணிப்பு குழு கூறியது.இதையடுத்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:தமிழகத்தில், சம்பா பருவத்தில், 15 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிடுவர். ஆனால், இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால், 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு மட்டுமே நெல் பயிரிட்டுள்ளனர். அதிலும், 9 லட்சம் ஏக்கருக்கு, ஒரு பாசனத்திற்கும், 3 லட்சம் ஏக்கருக்கு, இரண்டு பாசனங்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.இருந்தும், தண்ணீர் திறந்து விட கர்நாடக மாநில அரசு மறுக்கிறது. எனவே, தமிழகத்தில், பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரின் ஒரு பகுதியை காப்பாற்ற, 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் தமிழகத்தின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த மனு, தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், "தமிழக அரசின் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.


உடன், "வரும், 28ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
19-ஜன-201309:02:28 IST Report Abuse
மதுரை விருமாண்டி மம்மி புண்ணியம்... பயிர் கருகி, விவசாயி வாழ்க்கை கருகி மண்ணாப் போச்சி... வழக்கு மட்டும் வரும், 28ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமாம்.. இந்த கோர்ட்டு, கேசு, வழக்கு விசாரணைன்னா மம்மிக்கு வேண்டுமானா வெளையாட்டா இருக்கலாம்.
Rate this:
Share this comment
BATMANABIN - paris,பிரான்ஸ்
19-ஜன-201318:58:36 IST Report Abuse
BATMANABINகிண்டலடிக்காமல் வேறு நல்ல வழி இருந்தால் கூறுங்கள்.வீராணம் தண்ணீரையும் கிருஷ்ணா நதி நீரையும் சென்னைக்கு கொண்டு வந்து தீராத சென்னை குடிநீர் பிரச்சனையை தீர்க்கவில்லையா .இயற்க்கை பொய்த்துவிட்டது மதிய கங்குரசும் கருணா கட்சியும் செயற்கை தடையை உண்டாக்குகிறது .கோர்டில் நீதி கேட்பதை தவிர வேறு வழி இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை