நாசிக்: இக்கட்டான நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும், புதிய மொபைல் போன் அப்ளிகேஷனை, நாசிக் நகரை சேர்ந்த, மூன்று இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தில் இறந்ததை அடுத்து, பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இக்கட்டான நேரத்தில், பெண்களின் உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும், புதிய சாப்ட்வேரை, நாசிக் நகரை சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
"மீ அகைன்ஸ்ட் ரேப்' என்ற இந்த அப்ளிகேஷனை, ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் செயல்படும், மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும். ஆபத்தான நேரத்தில், மொபைலின், குறிப்பிட்ட ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம், அந்த பெண்ணின் உறவினர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தி பறக்கும்.அந்த செய்தியில், பெண் ஆபத்தில் இருப்பதாகவும், பெண் இருக்கும் இடம், நேரம், செல்லும் வழி போன்ற தகவல்களும் தெரிவிக்கப்படும்."இந்த அப்ளிகேஷனை, இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்' என தெரிவித்துள்ள, அப்ளிகேஷனை வடிவமைத்துள்ள குன்வந்த், 23, அனுப் உன்னிகிருஷ்ணன், 24, ஜெயேஷ், 23, ஆகியோரை, நாசிக் போலீஸ் கமிஷனர் குல்வந்த் குமார் பாராட்டியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.