கோவை:தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னையால், தொழில்துறை சார்ந்த குடிமகன்கள் பலர், "குடி' மகன்களாக மாறிவருகின்றனர். கோவை மாவட்டம் தொழில் துறைகளுக்கு முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. தொழில் துறையின் கீழ் பம்ப் நிறுவனங்கள், பஞ்சாலைகள், ஜவுளி, வெட் கிரைண்டர், உதிரி பாகங்கள் தயாரிப்பு என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர் அமைப்பு, தொழில் முனைவோர் என 35க்கும் மேற்பட்ட தொழில்துறை சார்ந்த அமைப்புகள் செயல்படுகின்றன.தமிழகத்தில் கடந்த 2008 முதல் இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 14 முதல் 18 மணி நேரமாக அதிகரித்துள்ளது.
மின்வெட்டு பிரச்னையால், தொழில்துறை பணியாளர்கள் மூன்று விதங்களில் குறைந்து வருகின்றனர். அதாவது 10 முதல் 18 மணி நேர மின்வெட்டின் தாக்கத்தால் பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களில் இரண்டு அல்லது மூன்று ஷிப்ட்டுகளாக நடந்து வந்த பணிகள், ஒரு ஷிப்ட்டாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் வருமான இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகும் நடுத்தர மற்றும் சிறு,குறு தொழிலாளர்கள் குடி பழக்கத்திற்கு ஆளாகி, மதுபோதைக்கு அடிமையாகி வருகின்றனர். "டாஸ்மாக்' தினசரி வருவாயில், "குடி'மகன்களாக மாறி வரும் தொழிலாளர்களில் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இதுதவிர, வெளி மாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்கள் மின்வெட்டு காரணமாக வருமானம் குறைவதால், சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர். தொழிலாளர்கள் சிலர், கட்டட வேலை, நடைபாதை கடை உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தொழில்துறை கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மின்பயணீட்டாளர்கள் சங்க தலைவர் மகேந்திர ராம்தாஸ் கூறுகையில்,""உத்திரபிரதேசம், பீகார் போன்ற பல வட மாநிலங்களில் தொழில்துறை சார்ந்த எந்த விழிப்புணர்வும் இல்லாத போதே தமிழகம் தொழில்துறையில் கொடி கட்டி பறந்ததது. ஆனால் மின்வெட்டு என்ற ஒன்றால் நிலைமை தலைகீழாக மாறிவருகிறது. தனி மனித மின் பயன்பாட்டில் இந்தியாவிலேயே கடந்த 30 ஆண்டுகளாக தமிழகமே முதல் மாநிலமாக இருக்கிறது. இதனால் தற்போது ஆட்கள் பற்றாக்குறையுடன் கூடிய கடுமையான நெருக்கடியில் தொழில்துறை சிக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான திறமையான தொழிலாளர்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்பது வருத்தத்திற்கு உரியது,''என்றார்.
"டேக்ட்' தொழில் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்,"" மின் வினியோகம் சீராக இருந்த போதே ஆட்கள் பற்றாக்குறை இருந்தது. ஆனால் தற்போது மின்வெட்டு பிரச்னையால் ஆட்கள் பற்றாக்குறையுடன் வேலையும் அதிகம் இல்லை, நமக்கு கிடைக்கவேண்டிய ஆர்டர்கள் குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு கைமாறி வருகிறது. வெகுவிரைவில் மின் பிரச்னை சரி செய்யப்பட்டாலும் கடுமையான ஆட்கள் பற்றாக்குறையை சந்திக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். சிறு, குறு தொழில் முனைவோர்கள் கடன்காரர்கள் என்ற பெயர் எடுத்து தற்போது குடி காரர்களாகவும் மாறிவிட்டனர்,'' என்றார்.
இந்திய தொழில்வர்த்தக சபை கோவை கிளை செயலாளர் பழனிசாமி கூறுகையில்,""மின்வினியோகம் சீராக இருந்தபோது, 35 சதவீத ஆட்கள் பற்றாக்குறை இருந்தது. தற்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. திறமையான பணியாளர்களை இழந்து வருகிறோம். மின்தடை பிரச்னை காரணமாக, தொழிலாளர்கள், கடன்காரர்களாக மாறி மன உளைச்சலில் குடிப்பழக்கதிற்கும் அடிமையாகி வருகின்றனர்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.