Advertisement
ஐந்தாண்டு தண்டனை காலத்தில் 31 பட்டங்களை பெற்ற டாக்டர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,00:51 IST

ஆமதாபாத்: அன்னிய செலாவணி மோசடி குற்றத்திற்காக, ஐந்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர், சிறையில் இருந்தபடியே படித்து, 31 பட்டங்களை பெற்றுள்ளார்; 57 வயதாகும் அவர், இதுவரை, 46 பட்டங்களை பெற்றுள்ளார்.குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை சேர்ந்தவர், பானு படேல்; மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.அன்னிய செலாவணி மோசடிக்காக, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட படேல், 2005 முதல், 2010 வரை, ஆமதாபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் இருந்த காலத்தில், வீணாக பொழுதை போக்காமல், கஷ்டப்பட்டு படித்து, 31 பட்டங்களை பெற்றார். பி.ஏ., - பி.எஸ்சி., - எம்.காம்., என, ஏராளமான பட்டங்களை குவித்தார். இதற்காக அவருக்கு, ஏராளமான விருதுகளும் கிடைத்துள்ளன.தண்டனை முடித்து வெளியே வந்த பிறகும், இப்போதும் ஏராளமாக படித்து வரும் படேல், பட்டங்களை வெல்வதே வாழ்வின் லட்சியம் என்கிறார்.அவர் மேலும் கூறியதாவது:நான் டாக்டராக இருந்ததால், சிறையில் அடைக்கப்பட்டதும், சிறை மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டேன். ஓய்வு நேரங்களில் படிப்பேன்; தொடர்ச்சியாக பல மணி நேரம் படித்துக் கொண்டே இருப்பேன். பட்டங்கள் நிறைய பெற வேண்டும் என்பது, என் சிறு வயது ஆசை.ஆங்கில அறிவு நன்றாக இருந்ததால், சிறை துறைக்கு தேவையான கடிதங்கள் எழுதுவது, பிற கைதிகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பது என, பல விதங்களில் என் கல்வி அறிவை பயன்படுத்தினேன். இப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Ramesh K - chennai,இந்தியா
19-ஜன-201314:01:32 IST Report Abuse
Ramesh K அட நம்ம பிரகாஷ் டாக்டர் போல...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.