புதுடில்லி: தமிழக மீனவர்கள் இருவர், இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க, இந்திய கோர்ட்டுகளுக்கு அதிகாரம் இல்லை என்ற, இத்தாலிய அரசின் வாதத்தை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. இந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு கோர்ட் அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.கேரளா, கொல்லம், நீண்டகரா துறைமுகத்தில் இருந்து, 2012 பிப்ரவரியில், கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இருவர், அவ்வழியே சென்ற, "என்ரிகா லெக்சி' என்ற இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கடற்கொள்ளையர்கள் என, நினைத்து மீனவர்களை சுட்டுக் கொன்ற, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களான, மாசிமிலியானோ லத்தோர் மற்றும் சால்வத்தோர் ஜிரோன் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்துள்ள இவர்கள், தற்போது, கொச்சியில் தங்கியுள்ளனர்.இந்நிலையில், "மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், இந்திய கடல் எல்லைக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க, இந்திய கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லை. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி, இத்தாலிய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது.டில்லியில் உள்ள தங்கள் நாட்டு தூதர் மூலமாக, இத்தாலிய அரசு இந்த மனுவை தாக்கல் செய்தது. இம்மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அல்டாமஸ் கபீர், நீதிபதி செலமேஸ்வர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க, கேரள அரசுக்கு அதிகாரமில்லை. இந்த வழக்கை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து, சிறப்பு கோர்ட் ஒன்றை, மத்திய அரசு அமைக்க வேண்டும்.எங்கு சிறப்பு கோர்ட் அமைக்க வேண்டும் என்பதை, தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து, மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதற்கிடையில், சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களில் ஒருவரான, ஜெலஸ்டின் மனைவி டோரா கூறுகையில், ""இவ்வழக்கை பொறுத்தவரையில், நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். எங்களை பொறுத்தவரை வழக்கு எங்கு நடைபெற்றாலும், நீதி கிடைக்க வேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.