Advertisement
துப்பாக்கி, பீரங்கி சத்தத்திற்கு நடுவேஅச்சமின்றி செயல்படும் நடுநிலை பள்ளி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
00:54

பூஞ்ச்: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே செயல்படும் நடுநிலைப் பள்ளி, எவ்வித பதற்றமும் இல்லாமல், செயல்படுகிறது.ஜம்மு - காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தின், பக்கீர் தாரா என்ற கிராமம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான, எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கும், பக்கீர் தாராவுக்கும், 1.5 கி.மீ., தான் இடைவெளி. எல்லையில் நடக்கும் மோதல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்களின் போது, இந்த கிராமம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.எனினும், சமீபத்திய உச்சகட்ட பதற்றத்திலும், எவ்வித அச்சமும் இல்லாமல், பக்கீர் தாரா அரசு நடு நிலை பள்ளி தினமும் செயல்படுகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர், பல்பீர் சிங்.எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலால், பள்ளியின் சுற்றுச் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சுவடும், பீரங்கி குண்டுகளுக்கு இலக்கானதால், பாதிக்கப்பட்ட கட்டடங்களும், இன்னும் அந்த பள்ளியில் காணப்பட்டாலும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்த அச்ச உணர்வும் கிடையாது.


மாணவர்களில் பலரும், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தான். 14 வயது தாய்ரா கவுன்சார் என்ற மாணவியின் தாய், எட்டு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டிலிருந்து தன் மகளைக் காப்பாற்றுவதற்காக, உயிரை இழந்தவர். இவரை போல ஏராளமான மாணவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தால், பல விதங்களில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களிடம் பயம் என்பதே இல்லை.நாட்டின் பிற பகுதி, நடுநிலைப் பள்ளி மாணவர்கள், வீடியோ கேம்ஸ், "டிவி' நிகழ்ச்சிகளை பற்றி பேசும் போது, இந்த பள்ளி குழந்தைகள், பாகிஸ்தான் தாக்குதல், துப்பாக்கி சூடு, பீரங்கி சத்தம், ராணுவ வாகனங்கள் போன்றவற்றை பற்றியே பேசி வருகின்றன.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
19-ஜன-201307:11:52 IST Report Abuse
Guru மாணவர்களே.., நன்கு படித்து உங்களில் ஒருவர் இந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தால் பள்ளியின் பெயர் என்றென்றும் அழியாமல் இருக்கும்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.