போபால்: மத்திய பிரதேசத்தில், ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 45 மணி நேரத்தில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.ம.பி., மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில், சிகோரா நகரில், கடந்த,13ம் தேதி ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் முகமது கவுஸ் ஆசாத் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் இறங்கிய போலீசார், முகமது கவுஸ் ஆசாத்தான், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதற்கான சாட்சியங்களை கண்டுபிடித்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியும், ஆசாத்தை அடையாளம் காட்டினர்.இதையடுத்து, 45 மணி நேரத்திற்குள்ளாக, போலீசார், முகமது கவுஸ் ஆசாத் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். "இந்த வழக்கு விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்படும். ஓரிரு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும்' என, ஜபல்பூர், ஐ.ஜி., மதுகுமார் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.