tesco returned its 1core berger | குதிரை மற்றும் பன்றி இறைச்சி வைக்கப்பட்ட ஒரு கோடி பர்க்கர்களை வாபஸ் பெற்றது "டெஸ்கோ' | Dinamalar

குதிரை மற்றும் பன்றி இறைச்சி வைக்கப்பட்ட ஒரு கோடி பர்க்கர்களை வாபஸ் பெற்றது "டெஸ்கோ'

Added : ஜன 19, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லண்டன்: பர்கர் உணவில், குதிரைக் கறி வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், ஒரு கோடி பர்கரை, அவற்றை தயாரித்த நிறுவனம், வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.அயர்லாந்தில், மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்களில், பர்கரில், குதிரைக் கறி வைக்கப்படுவதாக, அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.அயர்லாந்து விவசாயத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், பர்கர் தயாரிப்பு மையங்களில், கால்நடை மருத்துவர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் மூலம், பர்கரில், குதிரை மற்றும் பன்றி இறைச்சி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், "டெஸ்கோ' நிறுவனம் தான், பர்கரை விற்பனைக்கு அனுப்பியிருந்தது.குதிரை கறி மற்றும் பன்றி இறைச்சி வைக்கப்பட்ட விஷயம் தெரிய வந்ததால், ஒரு கோடி பர்கர்களை, "டெஸ்கோ' நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த இறைச்சிகளை வைத்து பர்க்கரை தயாரித்த, இரண்டு தொழிற்சாலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamarraj - Muscat,ஓமன்
19-ஜன-201309:32:41 IST Report Abuse
Kamarraj ஒரு நாள் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாத அளவிற்கு உணவு கலப்படம் செய்ய போகிறர்கள். நம் நாட்டவர்களும் மேலை நாட்டு மோகத்தில் அந்த கன்றாவியையும் சாப்பிட போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை