சிகாகோ: மும்பை தாக்குதலுக்கு, சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியின் கூட்டாளி, தகவுர் ராணா, தனக்கு விதிக்கப்பட்டுள்ள, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளார்.மும்பையில், 2008, நவம்பரில், தாக்குதல் நடத்திய, அஜ்மல் கசாப்புக்கு, கடந்த ஆண்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தவர், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான ஹெட்லி; இவருடைய கனடா நாட்டு கூட்டாளி, தகவுர் ராணா.மும்பை தாக்குதலில் பலியான, 166 பேரில், ஆறு பேர் அமெரிக்கர்கள். பலியானவர்களின் உறவினர்கள், இது தொடர்பாக, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, அமெரிக்க போலீசார், 2009ல், சிகாகோ நகரில், ஹெட்லியையும், அவரது கூட்டாளி ராணாவையும் கைது செய்தனர்.
மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததை, ஹெட்லி ஒப்புக் கொண்டதால், அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், டென்மார்க் நாட்டின், பத்திரிகை அலுவலகத்தை, வெடிகுண்டு வைத்து தகர்க்க, சதி செய்தது தொடர்பாக, ராணா மீது குற்றம் சுமத்தப்பட்டது.ராணாவுக்கு, 30 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் படி, அரசு தரப்பு வக்கீல்கள் கோரினர். ஆனால், ராணா வக்கீல் பீட்டர் பிலிக்கான், ஒன்பது ஆண்டுக்கு மிகாத தண்டனை அளிக்கும் படி வாதாடினார். இவ்வழக்கில் நேற்று முன்தினம், தீர்ப்பு கூறிய சிகாகோ கோர்ட், ராணாவுக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய உள்ளதாக, ராணாவின் வக்கீல், பீட்டர் பிலிக்கான் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.