அல்ஜியர்ஸ்: ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், பயங்கரவாதிகளால், கடத்தப்பட்ட, பிரிட்டன் பிணைய கைதிகள், 30 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின் மீது, பயங்கரவாதிகள்,இரண்டு நாட்களுக்கு முன், தாக்குதல் நடத்தினர். இதில், ஒருவர் கொல்லப்பட்டார்; ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான, "பிபி' நிறுவனத்தில் பணிபுரிந்த, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஊழியர் உட்பட, 50க்கும் அதிகமானவர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த பகுதியில், அல்ஜீரிய ராணுவம், நேற்றுமுன்தினம், வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், பிணை கைதிகள், 35 பேரும், கடத்தல்காரர்கள், 15 பேரும் கொல்லப்பட்டனர். 26 பிணைய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.இது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பார்லிமென்ட்டில் நேற்று குறிப்பிடுகையில், "அல்ஜீரிய ராணுவம், தகவல் ஏதும் தெரிவிக்காமல், பயங்கரவாதிகள் மீது, திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. பிரிட்டன் பிணைய கைதிகள், 30 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.