பாங்காக்: தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்த, நகைச்சுவை நடிகருக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்து நாட்டில், பூமிபால் அதுல்ய தேஜ், 85, மன்னராக உள்ளார். 2009ம் ஆண்டு முதல், உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது, தாய்லாந்து மக்கள் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.இந்நிலையில், 2010ம் ஆண்டு, தலைநகர் பாங்காக்கில் நடந்த, கண்டன பேரணியில், அந்நாட்டு நகைச்சுவை நடிகர், யொசாவரிஸ் சக்லோமி, 54, என்பவரும் பங்கேற்று, மன்னர் குடும்பத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.இதை அடுத்து, அவர் மீது, பாங்காக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.