உடையார்பாளையம்:
இடப்பிரச்னையில் இளம்பெண்ணை தாக்கிய, இரண்டு பேரை போலீஸார் கைது
செய்தனர்.உடையார்பாளையம் அருகே உள்ள வெத்தியார்வெட்டு பஞ்சாயத்தைச் சேர்ந்த
வரதராஜன் மனைவி ஜெயந்தி, 28. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன்
என்பவருக்கும் இடையே, இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் ரவிச்சந்திரன் பொது இடத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக
கூறப்படுகிறது. இதை ஜெயந்தி தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட
தகராறில் ரவிச்சந்திரன், 40, அவரது உறவினர் தனஞ்செயன், 38, ஆகியோர்
சேர்ந்து, ஜெயந்தியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஜெயந்தி,
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து வந்த புகாரின்படி, மீன்சுருட்டி போலீஸ் எஸ்.ஐ., கலியமூர்த்தி
வழக்குப்பதிவு செய்து, ரவிச்சந்திரன், தனஞ்செயன் ஆகிய, இருவரையும் கைது
செய்து விசாரிக்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.