E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,01:34 IST
கருத்துகள் (1)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஊட்டி: பொன் விழாவை கடந்து செயல்படும், ஊட்டி அரசு கலை கல்லூரி கட்டட விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை, கல்லூரியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது. ஊட்டி உருவாக காரணமாக இருந்த ஆங்கிலேயரான ஜான் சல்லிவன், தற்போதைய ஊட்டி அரசுக் கலை கல்லூரி கட்டடம் அருகே தனக்கென ஒரு குடியிருப்பை முதலில் அமைத்தார்.

கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம், "கல் பங்களா' "கன்னிமரா காட்டேஜ்' என அழைக்கப்படுகிறது. நிர்வாக பணிகளை மேற்கொள்ள அருகே ஒரு கட்டடத்தை மீண்டும் கட்டினார்; அந்த கட்டடம் கடந்த 1955 முதல், அரசுக் கலை கல்லூரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கட்டடமும் கடந்த 1905ம் ஆண்டைய ஆவணத்தின் படி, "கல் பங்களா முகப்பு' என பதிவாகியுள்ளது.

தொடரும் வளர்ச்சி : கல்லூரியில், தற்போது 3,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 14 இளங்கலை, 8 முதுகலை, ஏழு ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. 78 நிரந்தர பேராசிரியர்கள், 51 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். பொதுப்பணித் துறையினர், கல்லூரியை பராமரித்து வருகின்றனர்.


கல்லூரியை மேம்படுத்த, மாணவர் எண்ணிக்கையை உயர்த்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அரசு கலைக்

கல்லூரிக்கும், தலா 100 லட்சம் ரூபாய் ஒதுக்கி, தகுதியுள்ள கல்லூரிகளை பல்கலை கழகங்களாக தரம் உயர்த்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


"கல் பங்களா' சர்ச்சை : இந்நிலையில், ஊட்டி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள கன்னிமரா காட்டேஜ், கல்லூரி முதல்வர் குடியிருப்பாக அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில், பயன்படுத்தப்பட்டு வருகிறது. "இக்குடியிருப்பை அருங்காட்சியகமாக மாற்ற, சில தனியார்கள் குடியிருப்பை காலி செய்ய, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது' என, கூறப்படுகிறது. கல்லூரி இயக்குனரகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்படும் எழுத்துப்பூர்வ கடிதங்களில், "கல் பங்களாவை (ஸ்டோன் ஹவுஸ்) காலி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
ஆவணப்படி, கல்லூரி முகப்பு கட்டடம் தான் "கல்பங்களா' என பதிவாகியுள்ளது. இக்கட்டடத்தில், பொருளாதாரம், வரலாறு, கணிதம், பாதுகாப்பு, தமிழ் துறை வகுப்புகள் தவிர, கல்லூரி நூலகமும் செயல்படுகிறது. "இந்த கட்டடத்தை தான் காலி செய்ய அரசு வலியுறுத்துகிறது' என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


வளர்ச்சி தடைபடும் : கடந்த காலங்களில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி இல்லாததால், வெளியூரில் இருந்து, வந்து பணியாற்ற பேராசிரியர்கள் பலரும்

Advertisement

கல்லூரி வளர்ச்சிக்கு தடை? : அரசு கலைக் கல்லூரி, அதைசுற்றியுள்ள பகுதி 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது; இது, அரசு புறம்போக்கு என, ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டு குடியிருந்தாலே, அவர்களுக்கு பட்டா கொடுக்கும் அரசு, 58 ஆண்டுகளாக கல்வி போதிக்கும் பணியை செய்து வரும் அரசு கலைக்கல்லூரி பெயரில், நிலத்தை பதிவு செய்து கொடுக்க இதுவரை ஆர்வம் காட்டாமல் இருப்பதும், கல்லூரி பயன்பாட்டில் உள்ள கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்ற ஆர்வம் காட்டுவதும், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகம், வாடகை கட்டடத்தில், இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. அதை மேம்படுத்தி, அதன் பயன் மக்களை போய் சேர்வதற்கான நடவடிக்கையில் இறங்காமல், புதிதாக ஒரு அருங்காட்சியகம் ஏற்படுத்த "மெனக்கெடுவது' பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamarud - ooty,இந்தியா
20-ஜன-201307:49:29 IST Report Abuse
kamarud அருங்காட்சியகம் அரசு கல்லூரிக்கு அருகிலேயே அமைத்து உதகை யின் பெருமையை மேலும் கூட்ட வேண்டும் ..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.