DISTRICT NEWS | அரிசி மூட்டை திருடிய2 பேர் அதிரடி கைது| Dinamalar

தமிழ்நாடு

அரிசி மூட்டை திருடிய2 பேர் அதிரடி கைது

Added : ஜன 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போச்சம்பள்ளி: குடிபோதையில் ரைஸ் மில்லில் புகுந்து அரிசி மூட்டைகளை திருடிய இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ரைஸ் மில் உள்ளது. இந்த பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு எட்டு மணிக்கு குடிபோதையில் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் திறந்து கிடந்த ரைஸ் மில்லுக்குள் புகுந்து, 50 கிலோ எடையுள்ள இரண்டு அரிசி மூட்டைகளை திருடி எடுத்து வந்து பைக்கில் ஏற்றினர்.அப்போது, அந்த பகுதிக்கு மக்கள் பைக்கில் அரசி மூட்டை ஏற்றிய இருவரிடமும் சந்தேகமடைந்து விசாரித்தனர். விசாரணையில், குன்னத்தூரை சேர்ந்த மாதையன், ஆதாரஅள்ளியை சேர்ந்த மாது, 29 என்பதும் இவர்கள் ரைஸ் மில்லில் புகுந்து அரிசி மூட்டைகளை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரையும் பொதுமக்கள் பிடித்து நாகரசம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., பாண்டியன் விசாரித்து, மாதையன், மாது ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை