திருச்சி:
தொழிலதிபர் என்ற போர்வையில், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி, நூற்றுக்கும்
மேற்பட்டோரிடம், லட்சக்கணக்கில் பணத்தை, "ஸ்வாகா' செய்த இருவரை, பொருளாதார
குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.திருச்சி காஜாமலை திருமுருகநகரை
சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சாவித்திரி. இவர்களது மகன்
கோபாலகிருஷ்ணன், 26. சந்திரசேகரின் கூட்டாளி, திருச்சி சுப்ரமணியபுரத்தைச்
சேர்ந்த செல்வராஜ், 48. தொழிலதிபர் என்ற போர்வையில் வலம் வந்த இவர்கள்,
திருச்சி மன்னார்புரத்தில், அகிலாண்டேஸ்வரி குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற
பெயரில், எல்லையம்மன் பிளாட் பிரமோட்டர்ஸ் மற்றும் அமுதசுரபி ரியல் எஸ்டேட்
பிசினஸ் ஆகிய பெயர்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்தனர்."இவர்களிடம் ஒரு
பிளாட் (1,500 சதுரஅடி), 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால், ஓராண்டு
கழித்து, 15 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும்' என்று விளம்பரம்
செய்தனர். இதை நம்பி ஏராளமானோர், இவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை
செலுத்தி, வீட்டுமனை மற்றும் லாபத்தொகை கிடைக்கும் என, எதிர்பார்த்து
காத்திருந்தனர்.ஓராண்டுக்கு மேலாகியும், இவர்கள் நிலத்தை பதிவுச் செய்து
தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லை. பலமுறை
அலைக்கழிக்கப்பட்ட, திருச்சி காஜாநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 32, என்பவர்,
திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவாயினர்.இன்ஸ்பெக்டர் கபிலன்
மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில்,
கோபாலகிருஷ்ணன் மற்றும் செல்வராஜை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பொருளாதார குற்றத்துக்கென உள்ள, மதுரை உயர்நீதிமன்ற கிளை, பொருளாதார
சிறப்பு நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி, சிறையில்
அடைத்தனர்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கபிலன் கூறியபோது, ""ஆறுமுகம் என்பவர்
மீது ஒருவர் கொடுத்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரை தேடுகிறோம். மேலும், 24 பேர் தாங்கள்
ஏமாற்றப்பட்டுள்ளதாக புகார் கொடுத்துள்ளனர். இன்னும் நிறைய புகார் வரும்
என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.